Categories: Cinema News latest news

ஏன் இந்த அளவுக்கு இறங்கிட்டாரு?.. கடை கடையாக பிச்சை எடுக்கும் பார்த்திபன்.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் எதிலும் புதுமை , வித்தியாசம் என விதவிதமான முறைகளில் விஷயங்களை கையாள்பவர் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன். சமீபகாலமாக இவரின் படைப்புகள் பெரிதளவில் பேசப்பட்டு வந்தாலும் அவர் எதிர்பார்த்த அங்கீகாரம் என்னவோ அவருக்கு கிடைத்தப்பாடில்லை.

அதனால் மனம் தளராமல் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்பதையே குறிக்கோளாகவே கொண்டு வருகிறார். பேச்சில் கவிதைகளை கோர்த்து பேசுவதில் வல்லவர். எதையும் ரசித்து யோசித்து பேசுபவர். இப்படி ஒரு பண்புகளை கொண்ட பார்த்திபனின் ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

parthiban1

சென்னையில் புத்தக திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த விழாவிற்கு சென்ற பார்த்திபன் அங்கு உள்ள புத்தகங்களை எல்லாம் பார்த்துவிட்டு ரசித்துக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென ஒரு பெரிய வெள்ளை நிற துண்டை தன் இருகைகளாலும் விரித்து அங்கு அமைக்கப்பட்டுள்ள கடைகளில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க : “பிரபுதேவாவே விஜய் கிட்டத்தான் டான்ஸ் கத்துக்கனும்”… என்ன இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்தான்…

அதாவது புத்தகப்பிச்சை. ஒவ்வொரு கடைக்கும் சென்று புத்தகம் எதாவது இருந்தால் கொடுங்கள் என்கிற தோணியில் கேட்டு வருகிறார். இதற்கு பின்னனியில் இருக்கும் காரணம் ஒரு சமூக பண்பை அடிப்படையாக கொண்டே அமைந்திருக்கிறது. அதாவது சிறையில் இருக்கும் கைதிகள் புத்தகங்களை படிப்பதற்காக அவர்களுக்காகவே இந்த செயலை செய்திருக்கிறார் பார்த்திபன்.

parthiban2

இவரின் இந்த செயலை பார்த்த பல இணையவாசிகள் பார்த்திபனை பாராட்டிவருகிறார்கள். அந்த வீடியோதான் இப்போது வைரலாகி வருகின்றது.

Published by
Rohini