பார்த்திபனின் ஏஐ நீ வருவாய் என!.. செம யங்கா இருக்காரே மனுஷன்!..

 
parthiban

நடிகர் பார்த்திபன் தற்போது தனது நீ வருவாய் பாடலுக்காக உருவாக்கப்பட்ட AI வீடியோ ஒன்றை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிரார்.

சினிமாவில் புதிய பாதைகளை பயன்படுத்துவதில் ஆர்வம் கொண்ட பார்த்திபன், தனது படங்களில் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் ஏஐ உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல் வீடியோவையும் பகிர்ந்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.


இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் டேர் டெவில் திரைப்படத்தில் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள உஸ்தாத் பகத் சிங் திரைப்படத்திலும் பார்த்திபன் நடித்துள்ளார். 

இப்படி நடிப்பு, இயக்கம் எனத் தொடர்ந்து பிஸியாக இருந்து வரும் பார்த்திபன், தமிழ் சினிமாவில் வழக்கமாக இல்லாமல் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு புதுமையாக முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது AI மூலம் உருவான நீ வருவாய் பாடல் வீடியோவைப் பகிர்ந்திருப்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

கூடிய சீக்கிரம் ஏஐ மூலம் பார்த்திபன் படம் ஒன்றை உருவாக்கினாலும் உருவாக்கி விடுவார் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். சில ரசிகர்கள் பார்த்திபன் போலவே இல்லையே என்றும் கலாய்த்து வருகின்றனர்.

CR  Desk
CR Desk

7957 Articles

Sivakumar is an experienced digital journalist with 20 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news.

Tags

From Around the web