Categories: Cinema News latest news

விமலுக்கு நடிப்புச் சொல்லிக்கொடுத்ததே இந்த டாப் நடிகர்தான்?… இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

“கில்லி”, “கிரீடம்”, “குருவி” போன்ற திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தவர் விமல். இவர் பாண்டிராஜ் இயக்கிய “பசங்க” திரைப்படத்தின் மூலம் மிகப் பிரபலமாக அறியப்பட்டார். அத்திரைப்படத்தில் விமல் ஏற்று நடித்திருந்த மீனாட்சி சுந்தரம் என்ற கதாப்பாத்திரம் மிகவும் ரசிக்கும்படியாக அமைந்திருந்தது.

Vimal

கம் பேக் கொடுத்த விமல்

“பசங்க” திரைப்படத்தை தொடர்ந்து விமல் “களவாணி”, “தூங்கா நகரம்”, “வாகை சூடவா”, “கலகலப்பு” போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஆனால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு விமலின் கேரியர் சரிவை கண்டது. விமலின் கதையே முடிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருந்தபோதுதான் “விலங்கு” என்ற வெப் சீரீஸ் வெளிவந்தது. இந்த வெப் சீரீஸ் மிக பெரிய கம்பேக் ஆக விமலுக்கு அமைந்தது. மேலும் இந்த வெப் சீரீஸ் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Vimal

இந்த நிலையில் விமலுக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்த டாப் நடிகரை குறித்த ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது விமலுக்கு படிப்பு ஏறவில்லை என்பதால் பத்தாம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்திவிட்டாராம். அதன் பின் சினிமா மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த விமல், சினிமாவில் நடிகராக வேண்டும் என்று விருப்பப்பட்டாராம்.

நடிப்பு சொல்லிக்கொடுத்த டாப் நடிகர்

அதன் முயற்சியாக கலா மாஸ்டரின் டான்ஸ் அகாடமியில் சேர்ந்தாராம் விமல். அங்கிருப்பவர்களின் தொடர்புகளை கொண்டு கொட்டிவாக்கம் கூத்துப் பட்டறையில் நடிப்பு பயிற்சியில் சேர்ந்தாராம் விமல்.

Pasupathy

அங்கே கூத்து பட்டறையில் விமலுக்கு நடிகர் பசுபதிதான் வகுப்பு எடுத்தாராம். இவ்வாறுதான் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறார் விமல்.

இதையும் படிங்க:  விஜய் எல்லார்கிட்டயும் இப்படித்தான் நடந்துக்குவார்- ஆதங்கத்தில் பேசிய துணை நடிகை… அடப்பாவமே!

Arun Prasad
Published by
Arun Prasad