Categories: Cinema News latest news

கர்ணன், சூரரை போற்று குணச்சித்திர நடிகர் திடீர் மரணம்.! பேரதிர்ச்சியில் தமிழ் திரையுலம்…

சசி இயக்கத்தில் ஸ்ரீகாந்த்  நடித்து வெளியான பூ திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் அப்பாவாக நடித்து இருந்தவர் ராம். அதன் பிறகு பூ ராம் என்றே தமிழ் திரையுலகில் அறியப்பட்டவர் இவர்.

தனது திறமையான நடிப்பின் மூலம் இவர் பரியேறும் பெருமாள், சூரரை போற்று, கர்ணன், கோடியில் ஒருவன் என பல்வேறு நல்ல கதையம்சம் உள்ள திரைப்படத்தில் திறமையாக நடித்து நல்ல நடிகராக வலம் வந்தவர் பூ ராம்.

இதையும் படியுங்களேன் – நாய்க்குட்டி மேல் அதீத அன்பு வைக்கும் கனவு கன்னிகள்… திரிஷா, சமந்தா முதல் கீர்த்தி சுரேஷ் வரை…

இவர் இன்று உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் திரையுலகில் பேரதிர்ச்சி செய்தியாக பார்க்கப்படுகிறது.

நிச்சயம் தமிழ் சினிமா ஒரு நல்ல குணச்சித்திர நடிகரை இழந்துள்ளது என்றே தற்போது பலரும் கூறி வருகின்றனர்.

Manikandan
Published by
Manikandan