பாகுபலி அரண்மனையே மிஞ்சும் பிரபாஸ் வீடு - 2 ஏக்கரில் பிரம்மாண்டம்!
நடிகர் பிரபாஸ்:
தெலுங்கு சினிமா துறையில் பிரபலமான நடிகராக இருந்து வந்த பிரபாஸ் பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு பான் இந்திய நடிகராக மாறிவிட்டார். ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் பிரபலமான நடிகர் என்ற லிஸ்டில் பிரபாஸ் இடம் பிடித்தார் .

பாகுபலி வெற்றிக்குப் பிறகு பிரபாசை பிரம்மாண்ட படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு முந்தி அடிக்கிறார்கள். தொடர்ந்து சாஹோ, சலார் உள்ளிட்ட திரைப்படங்களில் பாகுபலி பிரபாஸ் நடித்தது குறிப்பிட்டது.
2 ஏக்கரில் பிரம்மாண்ட வீடு:
இந்த நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் நடிகர் பிரபாஸ் கிட்டத்தட்ட இரண்டு ஏக்கருக்கு மேல் இடம் வாங்கி ஹைதராபாத்தில் மிகப்பெரிய பிரம்மாண்டமான வீடு ஒன்றைக் கட்டி இருக்கிறாராம். அதன் கட்டுமான மதிப்பு மட்டுமே 160 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

அதில் நீச்சல் குளம், தியேட்டர், ஜிம் என பல சொகுசு அம்சங்கள் உள்ளடக்கி அந்த வீட்டை பிரபாஸ் கட்டி இருக்கிறாராம். அந்த வீட்டின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாக ....அப்பாடா பாகுபலி அரண்மனையையே மிஞ்சிவிட்டது பிரபாஸ் வீடு என ரசிகர்கள் வியப்படைந்துவிட்டனர்.
