மீண்டும் தாத்தாவான பிரபு - விக்ரம் பிரபுவுக்கு குவியும் வாழ்த்துக்கள்!
நடிகர் பிரபு:
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தில் பிறந்த வாரிசு நடிகர் தான் நடிகர் பிரபு. இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தது மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் சிறப்பு தோற்றங்களிலும் ஏற்று நடித்திருக்கிறார் .
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராக பார்க்கப்படும் இவர் தற்போது வரை சிறப்பு தோற்றங்களை ஏற்று நடித்து வருகிறார். இவருக்கு விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா பிரபு என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இதில் விக்ரம் பிரபு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மகள் ஐஸ்வர்யா:
அவரது மகள் ஐஸ்வர்யா இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆத்விக் ரவிச்சந்திரன் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தற்போதைய தகவல் கிடைத்திருக்கிறது.
தாய்மாமன் ஆன விக்ரம் பிரபு:
இந்த மகிழ்ச்சியான செய்தி அவரது ரசிகர்களை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அது மட்டும் இல்லாமல் நடிகர் விக்ரம் பிரபு தாய் மாமன் ஆகியிருக்கிறார். இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
சில தினங்களுக்கு ஐஸ்வர்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட உடனே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை அடுத்து திரைபிரபலங்கள் பலரும் அந்த தம்பதியினரை நேரில் சென்று வாழ்த்தியுள்ளனர்.
