Categories: Cinema News latest news throwback stories

அந்த விஷயத்துல ரஜினிக்கே டஃப் கொடுப்பாங்க..- மீனா பற்றி பிரபுதேவா சொன்ன சீக்ரெட்…

தமிழ் சினிமாவில் சில பிரபலங்கள் சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு அவர்களே பெரும் நட்சத்திரங்களாக உருவெடுத்துள்ளனர். அப்படி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா.

அப்போது தனக்கென தனி ரசிக பட்டாளத்தை கொண்டிருந்த நடிகைகளில் மீனாவும் ஒருவர். அப்போது பெரும் நடிகர்களாக இருந்த ரஜினி,கமல் என பல நடிகர்களோடும் மீனா நடித்துள்ளார். மீனா நடித்த திரைப்படங்களில் முத்து, எஜமான், என் ராசாவின் மனசிலே போன்ற பல படங்கள் மிகவும் பிரபலமானவை.

அதிலும் என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் விவரம் தெரியாத பெண்ணாக மிகவும் சிறப்பாக நடித்திருப்பார். மீனா சினிமாவிற்கு வந்து 30 வருடங்கள் நிறைவடைந்ததை அடுத்து அவருக்காக விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் மீனாவோடு வேலை பார்த்த பல நடிகர்கள் அவரை பற்றி தங்கள் அனுபவத்தை பகிர்ந்திருந்தனர்.

மீனாவின் நடிப்பு:

அப்போது நடிகர் பிரபுதேவாவும் மேடையில் பேசினார். வானத்தை போல, டபுள்ஸ் போன்ற திரைப்படங்களில் பிரபுதேவாவும் மீனாவும் சேர்ந்து நடித்துள்ளனர். பிரபு தேவா மீனாவை பற்றி கூறும்போது, மீனா இதுவரை 170 படங்கள் வரை நடித்துள்ளார். அதில் 150 திரைப்படங்கள் பெரும் வெற்றி கொடுத்தவை.

மீனாவுடன் நான் பணிப்புரியும்போது அவருடைய நடிப்பு திறமையை கண்டு மிரட்சி அடைந்துள்ளேன். எந்த ஒரு காட்சியையும் ஒரே டேக்கில் நடித்து முடித்துவிடுவார் மீனா. எனக்கு கூட இரண்டு, மூன்று டேக் செல்லும். அதே போல பெரிய வசனங்களை கூட இயல்பாக பேசி முடித்துவிடுவார் மீனா. தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினி இதே போல நடிப்பவர் என்பது பலரும் அறிந்த விஷயம், ஆனால் மீனாவும் அதே போல நடிப்பவர் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாகும்.

Rajkumar
Published by
Rajkumar