Categories: Cinema News latest news throwback stories

பிரபுவை பேச முடியாமல் செய்த எஸ்.பி.பி… அப்படி என்னதான் நடந்தது?

எம்ஜிஆரின் சொந்தப் படம் அடிமைப்பெண். இந்தப் படத்தில் தான் எஸ்.பி.பி. பாடிய முதல் பாடல் இடம்பெற்றுள்ளது. அதுதான் ‘ஆயிரம் நிலவே வா’ பாடல். அந்தப் படம் வந்த போது சிவாஜியும், பிரபுவும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்களாம்.

பிரபு ஆடியோ பிளேயரில் ஆயிரம் நிலவே வா பாடலைப் போட, சிவாஜி அதை மெய்மறந்து கேட்டுக் கொண்டு இருந்தாராம். அதே பாடலை மீண்டும் மீண்டும் பிரபுவைப் போடச் சொல்லிக் கேட்டாராம்.

இதையும் படிங்க… பிரசாந்த்லாம் பெரிய இடத்துக்கு போயிருக்கணும்!. மிஸ் ஆயிடுச்சி!.. பிரபல இயக்குனர் உருக்கம்!..

பாடல் முடிந்ததும் சிவாஜி இந்தப் பாடலைப் பாடியவர் யாருப்பான்னு கேட்டாராம். அதற்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம்னு ஒருத்தர் வந்துருக்காருப்பா. அவர் தான் பாடிருக்காருன்னு சொன்னாராம் பிரபு.

உடனே அதைக் கேட்ட சிவாஜி, நம்ம விச்சு கிட்ட சொல்லி என்னோட அடுத்த படத்துல இந்தப் பையனைப் பாட வைக்கணும்னு சொன்னாராம் சிவாஜி. அது மட்டுமில்லாம எம்எஸ்.வி.க்கிட்டயும் இதுபற்றி உடனே பேசணும்னு சொல்லி ஆர்வம் காட்டியுள்ளார் நடிகர் திலகம்.

அந்தப் படம் தான் சுமதி என் சுந்தரி. சிவாஜிக்காக எஸ்.பி.பி. பாடிய பாடல் ‘பொட்டு வைத்த முகமோ’. என்ன ஒரு அற்புதமான குரல் என்று எண்ணத் தோன்றியது.

நான் எப்போதாவது எஸ்.பி.பி. அண்ணனைப் பாராட்ட எழுந்தால் அவர் என்னை தடுத்து நிறுத்தி விடுவார். என்னைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டு இருப்பார்.

ராஜகுமாரன் படத்தில் என்னவென்று சொல்வதம்மா பாடலுக்கு பிரபுவின் எக்ஸ்பிரஷன் அருமையாக இருக்கும். அதனால் தான் அந்தப் பாட்டு ஹிட்டாச்சு என்பாராம்.

இதையும் படிங்க… வெக்கேஷன் போன இடத்துல இப்படி ஒரு சம்பவமா? விக்னேஷ் சிவன் போட்ட பதிவு..அடடா!

இதைக்கேட்டதும் பிரபுவுக்கு பேச்சே வராதாம். என்ன இப்படி சொல்லிவிட்டாரே அண்ணன் என்று வியந்து போய் நிற்பாராம். அந்தக் கேப்பில் எஸ்.பி.பி. பிரபுவோட நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்.

‘டூயட் படத்தில் சாக்சபோன் வாசிக்கும் அழகு இருக்கே அழகு… அப்பப்பா…’ என சொல்லி மேலும் அவரை திக்குமுக்காடச் செய்வாராம். நாம் கவனிக்காத சின்ன சின்ன நுணுக்கமான விஷயங்களையும் எஸ்பிபி கவனித்துப் பாராட்டுவதில் கில்லாடி என்கிறார் பிரபு.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v