aadhik
Good Bad Ugly: அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்து தயாராக போகும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க இருக்கிறார். மார்க் ஆண்டனி என்ற மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த பிறகு ஆதிக் இயக்கும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி.
அதனால் இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதுவும் அஜித்தின் தீவிர ரசிகர் ஆதிக் என அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதனால் ஒரு பேன் பாயாக அஜித்தை வைத்து எந்த மாதிரி ஒரு கதையை அமைக்கப் போகிறார் என்ற ஒரு ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
இதையும் படிங்க: சங்கமித்ரா பட அப்டேட் கொடுத்த சுந்தர்.சி… அங்கையே பல்ப் வாங்கியாச்சு… இது வேண்டாம்.. நழுவிய ஹீரோ…
ஏற்கனவே ஒரு ஃபேன் பாயாக கமலுக்காக மாபெரும் ஹிட் கொடுத்தவர் லோகேஷ். அதே மாதிரி ஒரு பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டை ஆதிக்கும் கொடுப்பாரா என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் குட் பேட் அக்லியில் இதுவரை அஜித்தை தவிர வேறு எந்த நடிகர்கள் நடிக்கிறார்கள் என்ற எந்த தகவலும் வரவில்லை.
prabhu
ஆனால் இந்த படத்தில் பிரபு கண்டிப்பாக நடிப்பார் என சித்ரா லட்சுமணன் கூறினார். அவரிடம் ரசிகர் ஒருவர் அஜித் படத்தில் பிரபுவுக்கு ஆதித் ஒரு வாய்ப்பு கொடுப்பாரா என கேட்டார், அதற்கு பதில் அளித்த சித்ரா லட்சுமணன் ‘கொடுக்காமல் இருப்பாரா? அதுவும் சமீபத்தில் தான் பிரபுக்கு ஆதித் மருமகனாக மாறியிருக்கிறார். அதனால் இந்த படத்தில் கண்டிப்பாக பிரபு நடிப்பார்’ என சித்ரா லட்சுமணன் கூறினார். இதற்கு முன் அஜித் பிரபு இணைந்து நடித்த திரைப்படமாக பில்லா திரைப்படம் அமைந்தது அதன் பிறகு இந்த குட் பேட் அக்னி திரைப்படமும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அந்த படத்தினை நான் மிஸ் பண்ணிருக்கேன்… சூப்பர்ஹிட் அடித்த 9 படங்களை தவறவிட்ட விஷ்ணுவிஷால்!
ஜெயம் ரவி…
Idli kadai:…
Vijay: கரூரில்…
Idli kadai:…
Rajinikanth: தமிழ்…