அஜித்த இனிமே இப்படி கூப்பிடுவோம்.. ‘குட் பேட் அக்லி’ ஸ்டில்ஸ் பார்த்து பிரசன்னா போட்ட பதிவு
குட் பேட் அக்லி அஜித்:
தற்போது குட் பேட் அக்லி படப்பிடிப்பில் இருந்து அஜித்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி மிகவும் வைரலாகி வருகின்றது. கிட்டத்தட்ட அமர்க்களம் படத்தில் இருக்கும் லுக்கை போல இந்த படத்தில் மொத்தமாக மாறி இருக்கிறார் அஜித். அச்சு அசலாக அமர்க்களம் படத்தில் இருப்பதைப் போலவே குட் பேட் அக்லி திரைப்படத்திலும் தனது தோற்றத்தை மாற்றி இருக்கிறார் அஜித்.
இதற்கு முழுக்க முழுக்க ஆதி ரவிச்சந்திரன் தான் காரணம் என ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. அந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்த நிலையில் படம் அடுத்த வருடம் மே ஒன்றாம் தேதி அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
பொங்கல் ரிலீஸ்:
ஆனால் அதைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதற்கு முன்பாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிலும் அஜித் கலந்து கொண்டு நடித்து வருகிறார் .அந்த படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என சொல்லப்படுகிறது. இதற்கு முன்பு வரை எல்லா படங்களிலும் அஜித் ஒரே மாதிரியான தோற்றத்திலேயே காணப்படுவார். ஆனால் குட் பேட் அக்லி திரைப்படத்தை பொறுத்தவரைக்கும் தன்னுடைய எடையை குறைத்தும் தோற்றத்தை மாற்றியும் 20 வயது குறைந்த மாதிரியான தோற்றத்தில் இப்போது இருக்கிறார் .
அந்த புகைப்படம் தான் இப்போது வைரலாகி வருகின்றது. காதில் கடுக்கன் கழுத்தில் ஒரு செயின் என அப்படியே அமர்க்களம் லுக்கில்தான் காணப்படுகிறார். இதுவரை வெளியான குட் பேட் அக்லி படத்தின் அஜித் ஸ்டில்ஸை பார்க்கும் போது படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப அஜித்தின் தோற்றத்தை ஆதிக் வடிவமைத்திருக்கிறார் என தெரிகிறது.
குட் ஸ்டைலில் ஒரு இமேஜ், பேட் ஸ்டைலில் ஒரு இமேஜ், அக்லி ஸ்டைலில் ஒரு இமேஜ் இப்படித்தான் படத்தில் அஜித்தை காட்டியிருக்கிறார் போல என தோன்றுகிறது.இந்த படம் ஒரு கேங்ஸ்டர் திரில்லர் ஆக்சன் படமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அதனால் அஜித் நடித்த படங்களிலேயே முழுக்க முழுக்க ஆக்சன் படமாக அமைந்தது அமர்க்களம் திரைப்படம் தான்.
100 கோடி கிளப்பில் இணைந்த படம்:
அதில் ஒரு லோக்கல் ரௌடியாக நடித்திருப்பார் அஜித். அதனால் அதே மாதிரியான ஒரு படத்தை எடுக்கும் முயற்சியில் தான் ஆதிக் இறங்கி இருக்கிறாரோ என இப்போது வைரலாகும் புகைப்படத்தை பார்க்கும் பொழுது நமக்கு தெரிகிறது. ஏற்கனவே ஆதிக்கின் முந்தைய படமான மார்க் ஆண்டனி திரைப்படமும் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாகத்தான் அமைந்தது.
ரவுடிகளுக்கு இடையேயான மோதலைத்தான் அந்த படம் உணர்த்தியது .அதுவும் மாபெரும் வெற்றி அடைந்து 100 கோடி கிளப்பிலும் இணைந்தது .அந்த வகையில் இப்போது அஜித்தை வைத்தும் அப்படி ஒரு படத்தை தான் எடுப்பாரோ என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அஜித்தின் இந்த புதிய ஸ்டில் இணையத்தில் வைரலாக அதை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் நடிகர் பிரசன்னா பதிவிட்டு ‘அழகே அஜித்தே’ இப்படி வச்சுக்கலாமா என தன்னுடைய பதிவில் பதிவிட்டிருக்கிறார்.
ஏற்கனவே கடவுளே அஜித்தே என ரசிகர்கள் கோஷமிட அதற்கு மிகவும் கவலையுடன் ஒரு அறிக்கையை பகிர்ந்து இருந்தார் அஜித். தன் பெயருடன் எந்த ஒரு முன்னொட்டு பெயரையும் சேர்த்து அழைக்கக்கூடாது என கூறியிருந்தார் அஜித். ஆனால் குட் பேட் அக்லி படத்தின் இந்த புகைப்படத்தை பிரசன்னா பகிர்ந்து அழகே அஜித்தே என பதிவிட்டு இருக்கிறார். அவர் சொன்னதைப் போல இந்த ஸ்டில்லில் அஜித் மிகவும் அழகாகவும் இளமையாகவும் காணப்படுகிறார். பிரசன்னாவும் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கூடவே தெலுங்கு நடிகர் சுனில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.