Categories: Cinema News latest news

ஒரே மந்தையில் இரு ஆடுகள்! முந்திக்கொண்ட பிரசாந்த்.. லெட்டர் பேடிலேயே உயிர் வாழும் விஜய்

Actor Prasanth: தற்போது பிரசாந்த் முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து தனது வாழ்த்தை தெரிவித்த செய்தி இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. 90கள் காலகட்டத்தில் மிகவும் ஹேண்ட்ஸமான ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். பெண்களின் கனவு நாயகனாக பெண்களை கொள்ளை கொண்ட ஹீரோவாக இருந்து வந்தவர் .

தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்ததன் மூலம் ஒரு சூப்பர் ஹீரோவாக திகழ்ந்து வந்தார். விஜய் அஜித் இவர்களை பின்னுக்கு தள்ளி முன்னணி நடிகராக ஒரு காலத்தில் இருந்தவர் தான் பிரசாந்த். இவருடைய கால்ஷீட் கிடைக்காமல் ஏகப்பட்ட இயக்குனர்கள் காத்திருந்த காலம் எல்லாம் நடந்திருக்கிறது. ஆனால் விதியும் ஒரு நாள் சதி செய்யும் என்பதற்கு உதாரணமாக பிரசாந்தின் வாழ்க்கையில் ஏகப்பட்ட சறுக்கல்கள் ஏற்பட்டன.

இதையும் படிங்க: தியேட்டரில் சத்யராஜிக்கு வந்த திடீர் மரியாதை… யப்பா மனுஷன் என்னம்மா சமாளிக்கிறாரு…!

அதனால் தொடர்ந்து பல பட வாய்ப்புகளை இழந்து ஒரு கட்டத்தில் படமே இல்லாமல் இருந்து வந்தார் பிரசாந்த். அதன் பிறகு நீண்ட வருடங்களுக்கு பிறகு அந்தகன் என்ற திரைப்படத்தில் நடித்து அந்தப் படம் எல்லாம் முடிந்து ரிலீசுக்கு தயாராகும் நிலையில் இருந்தாலும் ஏதோ சில பொருளாதார காரணத்தினால் அந்த படம் வெளியாகாமல் அப்படியே இருக்கின்றது.

அதன் பிறகு தான் அவருக்கு கிடைத்த ஒரு பம்பர் ஆஃபர் கோட் திரைப்படம். விஜய் நடிக்கும் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கிறார். அதனால் இந்த படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக ஆளும் கட்சி 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்று தொடர்ந்து சாதனை படைத்து வந்தது .

இதையும் படிங்க: அந்த சீனுக்கு மியூசிக் போடாதீங்க..! இளையராஜாவின் கையைப் பிடித்து நிறுத்திய இயக்குனர்… !

prasanth

இதனால் பல தரப்பினரிடம் இருந்து வாழ்த்துக்கள் வந்து கொண்டே இருந்தன. இதில் இப்பொழுது வரை விஜய்யிடம் இருந்து எந்த ஒரு வாழ்த்து செய்தியும் திமுகவுக்கு வரவில்லை .ஆனால் பிரசாந்த் மற்றும் அவருடைய தந்தை தியாகராஜன் இருவரும் நேரில் மு க ஸ்டாலினை சந்தித்து மலர் கொத்து கொடுத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர். அது சம்பந்தமான புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகின்றது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini