Categories: Cinema News latest news

கோட் படத்தின் ஹைலைட்டே அதுதான்! நீளமெல்லாம் ஒரு மேட்டரே இல்ல.. பிரசாந்த் சொல்றத கேளுங்க

Actor Prasanth: அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் விஜய் நடித்து தயாராகி இருக்கும் கோட் திரைப்படம் தான். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், சினேகா, மீனாட்சி சௌத்ரி, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், மோகன் மற்றும் யோகி பாபு போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கும் திரைப்படம் தான் கோட்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. படம் வரும் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. சமீபத்தில் தான் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து இருக்கின்றது.

இதையும் படிங்க: வாழை படத்தில் பெத்த கோடியை சம்பாரித்த மாரி செல்வராஜ்… இதெல்லாம் நடந்து இருக்கா?

இதற்கு முன்பாக படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றிருந்த நிலையில் அந்த விமர்சனத்திற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படத்தின் டிரைலர் அமைந்திருந்தது.  மேலும் இந்த படத்தின் பெரிய மைனஸ் ஆக இருப்பது படத்தின் நீளம் தான் என அனைவரும் கூறி வந்தார்கள்.

படத்தின் மொத்த நீளம் 2 மணி 56 நிமிடம் என சொல்லப்பட்டது. இதற்கு முன் வெளியான பெரிய பெரிய படங்களின் நீளமும் இதே மாதிரி இருக்க மக்கள் மத்தியில் சரியான வரவேற்பை பெறாத நிலையில் கோட் திரைப்படமும் அந்த ஒரு விமர்சனத்தை எதிர்கொள்ளுமா என்ற ஒரு சந்தேகம் அனைவரும் மத்தியிலும் இருந்து வருகிறது.

இதையும் படிங்க: நயன் – விக்கி திருமண வீடியோ வராம போனதுக்கு காரணமே தனுஷ்தானாம்!.. என்னாப்பா சொல்றீங்க!..

இருந்தாலும் படத்தில் ஆக்சன் காட்சிகள் அதிகமாக இருப்பதால் படம் ஆரம்பம் முதல் இறுதி வரை மக்களை ஒரு உற்சாகத்திலேயே வைத்திருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் படத்தில் நடித்த பிரசாந்த் கோட் படத்தின் நீளத்தை பற்றி கூறியிருக்கும் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது .

அதாவது கோட் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் அதில் ஹைலைட்டாக இருப்பது படத்தின் ஸ்கிரீன் பிளே தான். படத்தின் நீளத்தைப் பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள். எந்த ஒரு காட்சியிலும் உங்களை படம் சோர்வடைய செய்யாது. வெங்கட் பிரபுவிடம் இருந்து நல்ல ஒரு ஸ்கிரிப்ட்டை நீங்கள் எதிர்பார்க்கலாம் என பிரசாந்த் அதில் கூறியிருக்கிறா.ர் அந்த ஒரு செய்தி தான் இப்போது வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: நெல்சனுக்கு மெசேஜ் அனுப்பியும் ரிப்ளே வரல.. உருக்கமாக பேசிய பிஜிலி ரமேஷின் மகன்

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini