×

தலைப்புலயே இவ்ளோ பஞ்சாயத்தா? - பாவம் பிரசாந்துக்கு வந்த நிலமை!

 

தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு முன்பே நடிக்க வந்து ரசிகர் கூட்டத்தை பெற்றவர் பிரசாந்த். இவர் நடிகர் தியாகராஜனின் மகன் ஆவார். அதன்பின் முன்னணி இயக்குனர்கள் படத்தில் நடித்தார். ஆனால், கதையில் தலையீடு, ஓவர் பந்தா காரணமாக இயக்குனர்கள் அவரை வைத்து படம் எடுக்க தயங்கினர். எனவே, ஃபீல்டு அவுட் ஆனார்.

தற்போது,  ஹிந்தியில் ஹிட் அடித்த அந்தாதூன் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் பிரசாந்த் கண் தெரியாதவராக நடிக்கிறார்  இப்படத்தை அவரின் தந்தை தியாகராஜன் தயாரிக்கவுள்ளார். இப்படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கவிருந்தார். அவர் கூறியதன் பேரில் அதகளம் என்கிற தலைப்பை அதிக விலை கொடுத்து தியாகராஜன் வாங்கினார். ஆனால், மோகன் ராஜா இப்படத்திலிருந்து விலகிவிட்டார். தற்போது பொன்மகள் வந்தாள் பட இயக்குனர் ஃபெட்ரிக் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு பிளாக் அண்ட் ஒயிட் என்கிற தலைப்பை தியாகராஜன் தேர்ந்தெடுத்தார். ஆனால், கன்னடத்தில் இப்படி ஒரு படம் தயாராகி வருகிறது. எனவே, என்ன செய்வது என யோசித்த தியாகராஜன் ‘அந்தகன்’ என்கிற தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளார். அந்தகன் என்றால் பார்வைற்றவன் என அர்த்தம் ஆகும். 

ஒரு காலத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த பிரசாந்திற்கு தற்போது தலைப்பு கிடைப்பதிலேயே இவ்வளவு பஞ்சாயத்து ஏற்படுதால் தியாகராஜன் நொந்து போயுள்ளாராம். 

From around the web

Trending Videos

Tamilnadu News