Categories: Cinema News latest news

#Breaking: நடிகர் பிரதாப் போத்தன் திடீர் மரணம்…திரையுலகினர் அதிர்ச்சி….

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் பிரதாப் போத்தன். கதாநாயகன், குணச்சித்திர நடிகர் என தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும், வெற்றிவிழா, மைடியர் மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். தமிழ், தெலுங்கும், மலையாளம், இந்தி என 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவர் கேரளாவில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று  வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர்  மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 70. அவரின் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா