ஒரே டேக்..யார் சாமி இவரு…தனுஷை கண்டு வியந்த ப்ரித்வி பாண்டியராஜன்

 
ஒரே டேக்..யார் சாமி இவரு…தனுஷை கண்டு வியந்த ப்ரித்வி பாண்டியராஜன்

தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியக உள்ள படம் கர. மமீதா பைஜூ, ஜெயராம், கே.எஸ்.ரவிகுமார், கருணாஸ், ப்ரித்வி பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் ஏற்கெனவே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் டிரைலரும் கூட படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஒரே டேக்..யார் சாமி இவரு…தனுஷை கண்டு வியந்த ப்ரித்வி பாண்டியராஜன்

நாளை வெளியாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த சம்பவம் ஒன்றை நடிகர் ப்ரிதிவி பாண்டியரஜன் பகிர்ந்துள்ளார். அவர் கூறியபோது, கர படத்தில் ஒரு சீன் எடுக்கனும். ஆனால் திடீரென பெய்த மழையால் வேறு சீன் எடுக்கும் நிலை ஏற்பட்டது. அந்த சீன்ல நானும் கருணாஸ் சாரும் இருக்கிறோம் என்பது தனுஷ் சாருக்கு தெரியாது. சார் செட்டுக்கு வந்து சீன் பார்த்துட்டு இது வேற சீன், என்னோடது இல்லை என்று சொன்னார். விசயத்தை சொன்னதும் பரவாயில்லை விடுங்க என்று சொன்னார். நீங்க நம்ப மாட்டீங்க 2 நிமிசம் தான் அந்த ஸ்கிரிப்ட் பேப்பரை பார்த்தார். பக்கம் பக்கமாக இருந்த ஸ்கிரிப்ட் பேப்பரை ஒரு முறை சொல்லி பார்த்தார். பின்னர் டேக் போகலாம் என்றார். மனுசன் ஒரு டேக்கில் அந்த சீனை முடித்தார். எனக்கு யார் சாமி இவரு என்றுதான் தோன்றியது. செமையா செய்தாரு தனுஷ் என்று கூறினார்.

From Around the web