×

செல்போன் கடையை திறக்கப்போன புகழ்... முதல்நாளே இப்படி ஆகிப்போச்சே!....

 
செல்போன் கடையை திறக்கப்போன புகழ்... முதல்நாளே இப்படி ஆகிப்போச்சே!....

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியிருப்பவர் புகழ். அவரின் தலை முடியும், நகைச்சுவையும் பார்க்கும் போது தமிழ் சினிமாவில் இன்னொரு யோகிபாபுவாக அவர் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்தது போலவே அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது 7 திரைப்படங்களில் அவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும்,  மக்களிடம் அவர் பிரபலமாகி விட்டதால் சில கடை திறப்புகளுக்கு அவர் அழைக்கப்பட்டு வருகிறார். அவர் செல்லும் இடமெங்கும் ரசிகர்கள் கூட்டம் கூடி வருகிறது.

pugal

இந்நிலையில், நெல்லை வண்ணாரப்பேட்டையில் ஒரு புதிய செல்போன் கடைக்கு திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக புகழ் சென்றார். எனவே, அவரை காண ரசிகர்கள் கூடினர். எனவே, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும், விதிமுறைகளை மீறி அதிக கூட்டம் கூடியதால் மாநகராட்சி அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர். அதோடு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தனர். 

கடை திறப்பு விழா அன்றே கடைக்கு சீல் வைக்கப்பட்டதால் உரிமையாளர்கள் சோகமடைந்தனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News