×

நயன்தாராவை மீண்டும் தரக்குறைவாக விமர்சித்த ராதாரவி!

நடிகர் ராதாரவி நடிகை நயன்தாராவை மீண்டும் விமர்சித்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். 
 
நயன்தாராவை மீண்டும் தரக்குறைவாக விமர்சித்த ராதாரவி!

நடிகர் ராதாரவி, கடந்த 2019ல் நயன்தாரா பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார். இந்தநிலையில், சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நயன்தாரா பற்றி பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். 

ராதாரவி பேசுகையில், ``நடிகை நயன்தாரா என்ன அந்தக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரா? அவருக்கும் உதயநிதிக்கும் என்ன உறவு? நான் திமுக-வில் இருந்தபோது ஒரு நிகழ்ச்சியில் நயன்தாரா பற்றி நான் பேசவே இல்லை. ஆனால் பத்திரிகைகளில் நான் பேசியதாகப் போட்டு மாட்டிவிட்டாங்க. உடனே ராதாரவி பெண்களை அவதூறாகப் பேசிட்டார் என்று துடித்தார்கள். 

கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்குவதாகச் சொன்னார்கள். நான் நிரந்தரமாகவே போகிறேன் என்று சொல்லிவிட்டு வெளியே வந்துவிட்டேன். அப்போ நான் பேசிட்டேன்னு அப்படி குதிச்சீங்களே... இப்போ ஆ.ராசா பேசுனதுக்கு என்ன நடவடிக்கை எடுத்தீங்க?’ என்று பேசியிருக்கிறார். இந்த வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News