3 வருஷமா ஒரே டிரெஸ்.. துவைக்க கூடாது! பாலாவின் டார்ச்சரை அனுபவித்த நடிகை
பாலாவின் படைப்பு:தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருப்பவர் இயக்குனர் பாலா. ஏழு வருடங்கள் கழித்து அவருடைய இயக்கத்தில் வணங்கான் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் அருண் விஜய் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். எந்த ஒரு அழகான நடிகரும் பாலாவிடம் போனால் அந்த அழகு என்பது மறைக்கப்பட்ட விடும்.
போராடும் நடிகர்:அதே மாதிரி தான் அருண் விஜயின் தோற்றத்தையும் முற்றிலுமாக மாற்றி இருக்கிறார் பாலா. ஆனால் சினிமாவில் போராடிக் கொண்டிருக்கும் ஒரு நடிகராக அருண் விஜய் இருப்பதால் தன்னுடைய நடிப்பிற்கு தீனி போடும் ஒரு இயக்குனர் பாலா என்பதை புரிந்து கொண்டு அதை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் அருண் விஜய் .எவ்வளவு கஷ்டப்பட்டாலும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் என்பதைப் போல இந்த படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்திருக்கிறது.
ராஜேஸ்வரி கூறிய தகவல்: பாலாவை பொறுத்த வரைக்கும் அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு இப்போது வரைக்கும் என்னவெனில் நடிகைகளை, நடிகர்களை அவர் அடிப்பார் என்பதுதான். ஆனால் அது உண்மை இல்லை என்பதைப் போல ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் பாலா. இந்த நிலையில் பிரபல நடிகை ராஜஸ்ரீ பாலாவை பற்றி ஒரு தகவலை பகிர்ந்து இருக்கிறார். நந்தா படத்தில் சூர்யாவுக்கு அம்மாவாக நடித்தவர் தான் ராஜேஸ்வரி.
அதே போல சேது படத்திலும் ஒரு மன நோயாளியாக விக்ரமுக்கு தோழி போன்று ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சேது படத்தில் ஒரு அழுக்கு சட்டை பாவாடையுடன் பட முழுக்க நடித்திருப்பார். அந்த படத்தில் அந்த ஒரே சட்டை பாவாடையை தான் போட்டிருப்பார் ராஜஸ்ரீ. கிட்டத்தட்ட மூன்று வருடமாக அந்த சட்டையை துவைக்கவே இல்லை .ஏனெனில் பாலா அதை துவைக்க கூடாது என சொல்லிவிட்டாராம்.
அப்போது ஒரு சீனில் நடிக்கும் போது பாலாவை நினைத்து ராஜஸ்ரீ டேய் பாலா எப்படியாவது இந்த டேக்கை ஓகே செய்து விடு டா. நான் சீக்கிரம் போகணும் என்றெல்லாம் யோசித்து இருக்கிறேன் என ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் ராஜஸ்ரீ.