சௌந்தர்யா இயக்கத்தில் அந்த ஹீரோ!. கெஸ்ட் ரோலில் ரஜினி!... பரபர அப்டேட்...

 
சௌந்தர்யா இயக்கத்தில் அந்த ஹீரோ!. கெஸ்ட் ரோலில் ரஜினி!... பரபர அப்டேட்...
Rajini: ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து நடிகர் ரஜினி சுறுசுறுப்பாக பல படங்களை ஒப்பந்தம் செய்தார். ஞானவேல் ராஜாவுடன் வேட்டையன், லோகேஷ் கனகராஜுடன் ஒரு படம் என அதிரடி காட்டினார். ஒருபக்கம் ‘அப்பா நானும் ஒரு பண்றேன். கெஸ்ட் ரோல் பண்ணி கொடுங்க’ என மகள் ஐஸ்வர்யா கேட்க சம்மதம் சொன்னார் ரஜினி. அப்படி உருவான திரைப்படம்தான் லால் சலாம். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் பிப்ரவரி 9ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதையும் படிங்க: அடேய் விட்ருங்கப்பா… விஜய் சேதுபதியை விடாமல் துரத்தும் வில்லன் ரோல்… இந்தமுறையும் மாஸ் ஹீரோவா? இப்போது ரஜினி ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு வேட்டையன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரஜினியுடன் பஹத் பாசில், தெலுங்கு நடிகர் ராணா, பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், ரித்திகா சிங் என பலரும் நடித்து வருகிறார்கள். சௌந்தர்யா இயக்கத்தில் அந்த ஹீரோ!. கெஸ்ட் ரோலில் ரஜினி!... பரபர அப்டேட்... இந்த படப்பிடிப்பு இப்போது ஆந்திராவில் நடந்து வருகிறது. ஹைதராபாத்தின் முக்கிய சாலைகளில் இந்த படத்தின் சில காட்சிகளை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படம் முடிந்தவுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார். இதற்கிடையில் ‘அப்பா எனக்கும் கால்ஷீட் கொடுங்க. நானும் ஒரு படம் எடுக்கிறேன்’ என ரஜினியிடம் சௌந்தர்யா கேட்க ‘சரிம்மா ஒரு 10 நாள் கால்ஷீட் தருகிறேன். படத்தை எடுத்துக்கோ’ என சொல்லிவிட்டார். இதையும் படிங்க: ரஜினி படங்களோடு மோதி மாஸ் காட்டிய ராமராஜன்!.. அட இவ்வளவு படங்களா?!.. இப்போது அதற்கான வேலையில் இறங்கிவிட்டார் சௌந்தர்யா. இந்த படத்தில் ரஜினியின் உடன்பிறவா சகோதரர் மற்றும் தீவிர ரசிகருமான ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கவிருக்கிறாராம். லால் சலாம் படத்தை போல இந்த படத்திலும் ரஜினி கெஸ்ட் ரோலில் நடிக்கவிருக்கிறார். சௌந்தர்யா இயக்கத்தில் அந்த ஹீரோ!. கெஸ்ட் ரோலில் ரஜினி!... பரபர அப்டேட்... அப்பாவை வைத்து படம் எடுப்பதில் சௌந்தர்யாவும், தலைவருடன் நடிக்க போகிறோம் என ராகவா லாரன்ஸும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். சௌந்தர்யா ஏற்கனவே ரஜினியை வைத்து ‘கோச்சடையான்’ என்கிற அனிமேஷன் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் சரியாக போகவில்லை. எனவே, இந்த படத்தை ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் சௌந்தர்யா. இதையும் படிங்க: ஜெயலலிதாவின் விழாவில் அப்படி பேசிய ரஜினி!.. அரசியலுக்கு வராமல் போனதற்கு காரணம் அதுதானா?!.

From Around the web