மருத்துவமனையில் நடிகர் ரஜினியின் தற்போதைய நிலை!
நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த டிசம்பர் 15ம் தேதியில் இருந்து தொடங்கியது. ஹைதராபாத்தில் படத்தின் படப்பிடிப்பு நடக்க அனைவரும் அங்கு தகுந்த பாதுகாப்புடன் சென்றனர்.
Sat, 26 Dec 2020

இந்த நிலையில் தான் கொரோனா படப்பிடிப்பில் 8 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது, இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. சென்னை திரும்ப இருந்த ரஜினி ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இன்று டிஸ்ஜார்ஜ் செய்யப்படுவார் என்று பார்த்தால் அவரது ரத்த அழுத்தம் இன்னும் அதிகமாகவே உள்ளதாம். இதனால் இன்று சில டெஸ்ட் எடுக்கப்படவுள்ளதாம். இன்னும் சில நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.