
Cinema News
கமலுக்கு மட்டும்தானா?!.. ரஜினிக்கு இல்லையா?!. எதிர்ப்பை மீறி வைக்கப்பட்ட தலைப்பு!…
Published on
By
Actor Rajini: கமலுடைய திறமைகளை கண்டு அவர் நடித்த ஒரு படத்திற்கு சகலகலா வல்லவன் என்ற தலைப்பை எப்படி ஏவிஎம் நிறுவனம் வைத்ததோ அதேபோல் ரஜினியின் உண்மையான கேரக்டரை பொறுத்து அவருடைய படத்திற்கும் ஒரு தலைப்பை வைத்திருக்கிறார்கள் ஏவிஎம் நிறுவனம். ஆனால் அந்த தலைப்பிற்கு ஒட்டு மொத்த விநியோகஸ்தர்களும் எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றனர்.
அது ஏன் என்பதைப் பற்றிதான் இந்த செய்தியில் நாம் பார்க்க இருக்கிறோம். ரஜினி நடிக்க இருக்கும் ஒரு படத்திற்கு கதாசிரியர் ஒருவரிடம் ஏவிஎம் சரவணன் கதை எழுதுமாறு கூறினாராம். அப்போது அந்த கதாசிரியர் சம்மதம் தெரிவித்ததோடு ஒரு கண்டீஷனையும் கூறி இருக்கிறார். இந்த படத்தின் டைட்டிலில் கதை திரைக்கதை வசனம் எல்லாவற்றிற்கும் தன் பெயரை போட வேண்டும் என கேட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: இவருக்கு சனி ஜாதகத்துல இல்ல! கூடவே இருக்கு.. இப்படி ஒரு வாய்ப்பை மிஸ் பண்ணிட்டாரே
அதற்கு ஏவிஎம் சரவணன் எங்களுடைய நிறுவனத்தை பொருத்தவரைக்கும் திரைக்கதை அமைப்பது எல்லாமே பஞ்சு அருணாச்சலம் தான்.. அதனால் திரைக்கதையில் அவர் பெயரைத்தான் போடுவோம் என கூறினாராம். உடனே அந்த கதாசிரியர் இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன் என கூறிவிட்டாராம். அதன் பிறகு குகநாதனிடம் போய் ஏவிஎம் சரவணன் இது பற்றி கூற அவரே முன் வந்திருக்கிறார்.
பிறகு படத்திற்கு ஒரு நல்ல தலைப்பை சூட்ட வேண்டும் என அனைவரும் தேடிக் கொண்டிருக்க ஏவிஎம் சரவணன் அப்போது கமலுடைய திறமை நடிப்பு இவற்றையெல்லாம் வைத்து எப்படி சகலகலா வல்லவன் என்ற தலைப்பை கொடுத்தோமோ அதே போல ரஜினி அடிப்படையில் ஒரு நல்ல மனிதர். அதனால் இந்த படத்திற்கு மனிதன் என்ற தலைப்பையே வைக்கலாம் என கூறினாராம்.
இதையும் படிங்க: இதுக்கு மேல வேண்டாம்!. தாங்காது!. டூ பீஸில் அதிரவிட்ட மாளவிகா மோகனன்…
அதற்கு விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். அதற்கு காரணம் ஏற்கனவே டி.கே. சண்முகம் நாடகக் குழுவில் மனிதன் என்ற பெயரில் ஒரு நாடகம் தயாராகி அது படமாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தப் படம் பெரும் தோல்வியடைந்ததாம். அதை வைத்து விநியோகஸ்தர்கள் அந்த தலைப்பு வேண்டாம் என கூறி இருக்கிறார்கள்.
rajini1
அதற்கு ஏவிஎம் சரவணன் அப்படி மாதிரியான சென்டிமென்ட் எல்லாம் நம் கம்பெனியில் கிடையாது. இந்த தலைப்பே இருக்கட்டும் என கூறினாராம். அது போல இந்த படத்திற்கு மனிதன் என தலைப்பை வைத்து படத்தை வெளியிட படம் மாபெரும் வெற்றி அடைந்திருக்கிறது. இந்த சுவாரஸ்ய தகவலை பிரபல சினிமா தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறினார்.
இதையும் படிங்க: இத்தனை நாளா விஜய் சேதுபதி அங்கேயா இருந்தாரு? என்ன ஒரு டெடிகேஷன்!
ரஜினி கமல் காம்போ : இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். 80-களின் காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க...
Rajasaab: ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம்...
Kantara Chapter 1: கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து 2022ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம்...
str 49 : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரில் ஒருவர் வெற்றிமாறன். இவரின் படங்களில் நடிக்க இந்தியாவின் உள்ள முன்னணி நடிகர்கள்...
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. தனுஷ் இயக்கியுள்ள 4வது திரைப்படம் இது. இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ்,...