Game Changer: பல கெட்டப்புகளில் அசத்தும் ராம்சரண்... டீசரிலேயே வேற லெவல் சம்பவம்!... மீண்டும் வந்துருவாரா சங்கர்?!...

 
Game Changer: பல கெட்டப்புகளில் அசத்தும் ராம்சரண்... டீசரிலேயே வேற லெவல் சம்பவம்!... மீண்டும் வந்துருவாரா சங்கர்?!...
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கின்றது. ராம்சரண்: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராம்சரண். தெலுங்கு மட்டும் இல்லாமல் இவருக்கு தமிழிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றார்கள். இவர் கடைசியாக இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. ஆஸ்கார் வரை சென்று அவார்டுகளை வென்று குவித்தது. இதனால் உலக அளவில் புகழ் பெற்றிருக்கின்றார் ராம்சரண். இதையும் படிங்க:  Vidamuyarchi: விடாமுயற்சி பொங்கலுக்கு வருமா…? அதுவும் சந்தேகம்தானா..? அவரே காரணமா…? கேம் சேஞ்சர்: தற்போது தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்பட்டு வரும் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் வருகிற ஜனவரி 10-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கின்றது. படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியிருக்கின்றார். மேலும் சங்கர் இப்படத்தை இயக்கியிருக்கின்றார். இந்த திரைப்படத்தில் ராம்சரனுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கின்றார். மேலும் எஸ் ஜே சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இந்தியன் 2: இயக்குனர் சங்கருக்கு இந்த திரைப்படம் மிகவும் முக்கிய படமாக பார்க்கப்படுகின்றது. ஏனென்றால் சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவான இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அது மட்டுமில்லாமல் பல விமர்சனங்களை எதிர்கொண்டார். தனது சினிமா கெரியரில் தோல்வி படங்களை கண்டிராத ஷங்கருக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய சறுக்களை கொடுத்திருக்கின்றது. Game Changer: பல கெட்டப்புகளில் அசத்தும் ராம்சரண்... டீசரிலேயே வேற லெவல் சம்பவம்!... மீண்டும் வந்துருவாரா சங்கர்?!... இப்ப படத்தின் மூலமாக ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளானார் இயக்குனர் சங்கர். இருப்பினும் அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் கேம் சேஞ்சர் திரைப்படத்தை இயக்கி முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் நிச்சயம் வெற்றி படமாக அமைந்து கம்பேக் கொடுப்பார் சங்கர் என்று பலரும் கூறி வருகிறார்கள். கேம் சேஞ்சர் டீசர்: சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாக்கி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கின்றது. ஒரு நிமிடம் 31 நொடிகளுக்கு ஒளிபரப்பாகும் இந்த டீசரில் ராம்சரண் பல கெட்டப்புகளில் தோன்றுகின்றார். அதேபோல எஸ்ஜே சூர்யாவும் 2 கெட்டப்புகளில் திரைப்படத்தில் தோன்றுகின்றார். படத்தின் டீசரை வைத்து பார்க்கும் போது படம் அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டது போல் தெரிகின்றது. இதையும் படிங்க:  Nayanthara: நயன்தாரானாலே பேரழகி தானே?!… படம் ரேஞ்சுக்கு பில்டப்!… வெளியான மேரேஜ் ட்ரைலர்!… மேலும் தமிழ் சினிமாவில் வெளியான இயக்குனர் சங்கரின் முதல்வன், சிவாஜி உள்ளிட திரைப்படங்களின் சாயல் இருப்பது போல தெரிவதாக டீசரை பார்த்தவர்கள் கூறி வருகிறார்கள். சங்கர் திரைப்படம் என்றாலே அதில் பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது என்பது போல் இந்த டீசரும் பார்ப்பதற்கு மிகப் பிரம்மாண்டமாக காட்சியளிக்கின்றது. எனவே இந்த திரைப்படமும் மிக பிரம்மாண்டமாக ஷங்கர் ஸ்டைலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. https://www.youtube.com/watch?v=jocqMOkSqqg

From Around the web