ரிஸ்க் மேல் ரிஸ்க் எடுக்குறாரே!.. ரவி மோகனுக்கு என்னாச்சி?..
Ravi Mohan: ரவி மோகனுக்கு கடந்த பல வருடங்களாகவே ஹிட் சூப்பர் ஹிட் படம் அமையவில்லை. மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் மட்டுமே வெற்றி பெற்றது. ஒருபக்கம் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்து பரபரப்பை உண்டாக்கினார். மேலும் பாடகி கெனிஷாவோடு இவருக்கு தொடர்பு உள்ளதாகவும் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. சமீபகாலமாக பல நிகழ்ச்சிகளுக்கும் அவர் கெனிஷாவோடுதான் செல்கிறார்.
தற்போது ரவி மோகன் ஸ்டுடியோ என்கிற பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தையும் ரவி துவங்கியிருக்கிறார். அதில் இரண்டு படங்கள் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. புரோ கோட் என்கிற படத்தை கார்த்திக் யோகி இயக்க உள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவியும். எஸ்.ஜே சூர்யாவும் நடிக்கவுள்ளனர். அடுத்து An Ordinary Man என்கிற படத்தை ரவியே இயக்க யோகி பாபு ஹீரோவாக நடிக்கிறார்.
தயாரிப்பு நிறுவனம் தொடங்கியதைரே ஒரு விழா போல நடத்தினார் ரவி. இந்த விழாவில் சிவ்ராஜ்குமார், எஸ்.ஜே.சூர்யா, கெனிஷா, சிவகார்த்திகேயன், கார்த்தி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பொதுவாக நடிகர்கள் சினிமா தயாரிப்பில் இறங்க மாட்டார்கள். ஏனெனில் அதில் அதிக ரிஸ்க் இருக்கிறது. படம் தோற்றுப் போனால் தயாரிப்பாளருக்கே நஷ்டம் வரும்.
ஒரு பக்கம் சினிமாவில் கந்து வட்டி என சொல்லப்படும் அதிக வட்டிக்கு பைனான்ஸ் கொடுக்கும் நபர்களிடம் தொடர்பு கொண்டு பணம் கேட்கிறதாம் ரவியின் தரப்பு. இந்த தகவலை கேட்டு ரவியின் அண்ணன், அப்பா ஆகியோர்களே கலக்கம் அடைந்திருக்கிறார்களாம். ஒருபக்கம், இதுவரை ஹீரோவாக மட்டுமே நடித்து வந்த ரவி தற்போது வில்லனாகவும் நடிக்க துவங்கி விட்டார். பராசக்தி படத்தில் ஏற்கனவே வில்லனாக நடித்து வந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள பென்ஸ் படத்திலும் ரவியே வில்லனாக நடிக்கவிருக்கிறார்.
இதையடுத்து ஜெயம் ரவிக்கு என்னாச்சி?.. அப்படி என்ன பணத் தேவை? எதற்கு இப்படி அதிக ரிஸ்க் எடுக்கிறார்? என சினிமா வட்டாரத்தில் பேசத் துவங்கி விட்டார்கள். தயாரிப்பு நிறுவனம் துவங்கி படங்களை தயாரிக்க தொடங்கி விட்டதால் நிறைய பணம் தேவைப்படும் என்பதால்தான் ரவி இப்படி இறங்கி விட்டதாக சொல்லப்படுகிறது.
