">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் நடிகர் ரியோ – அப்போ செமயா இருக்கும்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போகும் நடிகர் ரியோ
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகம் முழுக்க பெரும் பேமஸான நிகழ்ச்சி. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன் முடிந்துள்ள நிலையில் தற்ப்போது 4வது சீசன் துவங்க உள்ளது.
இந்த நிகழ்ச்சியும் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவது உறுதியாகிவிட்டது. கொரோனா ஊரடங்கினாள் ஷூட்டிங் தள்ளி சென்றுள்ளது. பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ளதாம். இதன் முதல் கட்ட வேலையாக போட்டியாளர்கள் தேர்வு குறித்த பணிகள் நடைபெறு வருகிறது. அந்தவகையில் டிக்டாக் பிரபலம் இலக்கியா மற்றும் நடிகை ரம்யா பாண்டியன், குக் வித் கோமாளி புகழ், வித்யு லேகா ராமன் , பூனம் பாஜ்வா, ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்டோர் பங்கேற்பதாக தகவல் கசிந்தது.
இந்நிலையில் தற்ப்போது தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி ஹீரோவாக நடித்துவரும் பிரபல நடிகர் ரியோ பிக்பாஸ் 4 நிகழ்ச்சிக்கு தேர்வாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கூடிய விரைவில் இதன் விவரம் வெளியிடப்படும் என நம்பலாம்.