Categories: Cinema News latest news

கடவுள்தான் காப்பாத்தனும் குமாரு! அமீர் பிரச்சினையால் பின்வாங்கும் சமுத்திரக்கனி.. நண்பன்னா ஓடி வருவீங்க

Actor Samuthirakani: தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக அறிமுகமாகி அதன் பின் பல கருத்துள்ள படங்களை மக்களுக்கு கொடுத்து ஒரு சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றவர் சமுத்திரக்கனி. இப்போது ஒரு நடிகராக அனைவரும் விரும்பத்தக்க ஒரு மனிதராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

குணச்சித்திர நடிகராக வில்லனாக என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் கச்சிதமாக நடிப்பவர் சமுத்திரக்கனி. ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். ஹீரோனாலே டூயட், சண்டை என இல்லாமல் சமூக கருத்துள்ள படங்களில் நடித்து அதிலும் ஜெயித்துக்காட்டியவர்.

இதையும் படிங்க: ஆர்மோனியத்தை தொடாமல் வித்தியாசமாக இசை அமைத்த இளையராஜா… என்ன படம்னு தெரியுமா?

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் ஒரு முன்னணி நடிகராகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் சமுத்திரக்கனி அமீர் குறித்து ஒரு தகவலை கூறியிருக்கிறார். ஏற்கனவே அமீர் பருத்திவீரன் பிரச்சினையில் அமீருக்காக முதல் ஆளாக குரல் கொடுத்தவர் சமுத்திரகனி.

ஆனால் இப்போது அமீருக்கு இருக்கும் பிரச்சினையே வேற. ஜாஃபர் பிரச்சினையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் அமீரை பற்றி சமுத்திரக்கனியிடம் கேட்ட போது பருத்திவீரன் பிரச்சினை என்ன என எனக்கு நன்கு தெரியும். அதனால் அந்த விஷயத்தில் தலையிட்டு நான் அமீருக்காக பேசினேன்.

இதையும் படிங்க: நடிப்புக்கு வடிவேலு டிரெய்னிங் எடுத்த இடம் இதுதானாம்!.. அங்கதான் எல்லாத்தையும் கத்துக்கிட்டாராம்!…

ஆனால் இந்த பிரச்சினையின் உண்மை நிலவரம் என்ன என்பது எதுவுமே எனக்கு தெரியாது. அதனால் அமீர் இந்த பிரச்சினையில் மாட்டிக் கொள்ளாமல் எப்படியாவது வெளியே வரவேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். அமீருக்கு அந்த கடவுள் தான் உறுதுணையாக இருக்க வேண்டும் என சமுத்திரக்கனி கூறினார்.

ஜாஃபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் என்றும் அவருக்கும் அமீருக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாகவும்தான் இப்போது பிரச்சினை போய்க் கொண்டிருக்கிறது. இதில் தனக்கு எந்த வித தொடர்பும் இல்லை என்பதே அமீரின் வாக்குவாதம். இது சம்பந்தமான வழக்கு தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini