×

மனைவி, மாமியார் தொல்லை... தற்கொலை செய்துகொண்ட தோனி பட நடிகர்!

சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் எம்.எஸ்.தோனி - அண்டோல்டு ஸ்டோரி படத்தில் இணைந்து நடித்த சந்தீப் நஹர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 
 
 

மும்பையின் புறநகர்ப் பகுதியான கொரேகான் பகுதியில் மனைவி கஞ்சன் மற்றும் மாமியாருடன் வசித்து வருபவர் சந்தீப் நஹர். 32 வயதான இவர், சுஷாந்துடன் தோனி படம், அக்‌ஷய் குமாருடன் கேசரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர். துணை நடிகர் கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றிருந்த சந்தீப்புக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்படும் என்று தெரிகிறது. இந்தநிலையில், அவரது வீட்டில் தூக்கில் தொங்கியபடி அவர் கண்டெடுக்கப்பட்டிருக்கிறார். 


அவரை மீட்டு அவரது மனைவி கஞ்சன் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸ் விசாரணை நடந்துவருகிறது. இறப்பதற்கு முன்னர் பேஸ்புக்கில் நீண்ட பதிவு ஒன்றை சந்தீப் இட்டுள்ளார். அதில், தனது மனைவியுடனான சண்டையால் ஏற்படும் மன அழுத்தத்தைத் தாங்க முடியவில்லை என்றும், மனைவியும் மாமியாரும் தன்னைப் புரிந்துகொள்ளவில்லை என்றும் சந்தீப் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், தனது இந்த முடிவுக்கு மனைவி காரணமல்ல என்று கூறியிருக்கும் சந்தீப், தான் தற்கொலை செய்யப்போவதாகவும் அதில் தெரிவித்திருக்கிறார். வாழ்க்கையில் நிறைய ஏற்ற, இறக்கங்களைப் பார்த்துவிட்டதாகச் சொல்லியிருக்கும் சந்தீப், தனது மனைவின் குணநலன்கள் வித்தியாசமானவை என்று குறிப்பிட்டிருக்கிறார். தோனி படத்தில் நடித்திருந்த சுஷாந்த் மர்ம மரணம் அடைந்த நிலையில், அவருடன் நடித்திருந்த மற்றொரு நடிகர் தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

From around the web

Trending Videos

Tamilnadu News