நீ பேசிய வசனத்தால் படத்தை ரிலீஸ் செய்ய முடியல- சந்தானத்திடம் சொன்ன விஜய்
தமிழ் சினிமாவில் வசூல் சக்ரவர்த்தி என்றால் அது விஜய்தான். அவரது படங்கள் வந்தாலே திருவிழா கோலம் தான் ரசிகர்களுக்கு. விஜய் படங்களை பொறுத்தவரை பாடல்கள் , நடனங்களை அடுத்து காமெடிக்கும் எப்போதும் முக்கியத்துவம் இருக்கும். அதிலும் சந்தானம் விஜயுடன் நடித்த படங்கள் அனைத்தும் காமெடி காட்சிகள் ரசிகர்களால் இன்றும் ரசிக்கப்படுகிறது. சச்சின், அழகிய தமிழ்மகன், வேலாயுதம் மற்றும் தலைவா ஆகிய படங்களில் இவர்கள் காமினேசனில் வெளியாகின. அதிலும் தலைவா படத்தில் ப்பல இடங்கக்ளில் அர்சியல் கலந்த பஞ்ச் காமெடி செய்திருப்பார் சந்தானம்.

இந்த நிலையில் சந்தானம் கடண்டஹ் சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில் தலைவா படப்பிடிப்பில் நடண்டஹ் சம்பவத்தை பகிர்ந்திருந்தார். அவர் கூறியபோது, தலைவா படப்பிடிப்பின்போது விஜய் சாரிடம் உனக்கு அரசியலுக்கு வர்ற எல்லா தகுதியும் வந்திருச்சு என்று வசனம் பேசினேன். அந்த படம் ரிலீஸின் போது சில பிரச்சனைகள் ஏற்பட்டு படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. அப்போது விஜய் விளையாட்டாக என்னிடம் நீ இந்த வசனத்தைச் சொல்லிட்டு போய்ட்ட இப்போ அது தீயாக்க பரவி படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போகுது என்று விஜய் கூறியதாக சந்தானம் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.