விஜய் பாட்டுக்கு!.. மனைவியுடன் வேறலெவல் டான்ஸ் ஆடிய சாந்தனு!..

 
kiki

நடிகர் சந்தனு பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி கிகி விஜய் இணைந்து நடிகர் விஜய்யின் சூப்பர் ஹிட் பாடலான 'ஆள்தோட்ட பூபதி' பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நடிகர் சாந்தனு பாக்யராஜ் சக்கரக்கட்டி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள அவர், எதிர்ப்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

அதேபோல், அவரது மனைவி கிகி தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், நடனக் கலைஞராகவும் ரசிகர்களிடம் பிரபலமானவர். இருவரும் சமூக வலைதளங்களில் தங்களது நடன வீடியோக்கள் மற்றும் ஜோடியாகப் பகிரும் பதிவுகள் மூலம் அவ்வப்போது ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகின்றனர்.

தற்போது வெளியாகியுள்ள இந்த நடன வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. மேலும்,சாந்தனு நன்றாக நடனமாடுகிறார், நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்திருந்தால் இந்நேரம் சினிமாவில் இன்னும் பெரிய இடத்தைப் பிடித்திருப்பார் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

CR  Desk
CR Desk

7961 Articles

Sivakumar is an experienced digital journalist with 20 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news.

Tags

From Around the web