Connect with us
santhanu

Cinema News

மாஸ்டர் படத்துல நடிச்சதுல அவமானம்தான் மிச்சம்!.. புலம்பும் சாந்தனு பாக்கியராஜ்…

தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னனாக வலம் வந்தவர் பாக்கியராஜ். பல படங்களை இயக்கி, நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். பல புதிய இயக்குனர்களுக்கும் வழிகாட்டியாக இருந்தவர். ஆனால், திரைக்கதை மன்னனாக இருந்தும் சினிமாவில் தனது மகன் சாந்தனுவின் எதிர்காலத்தை இவரால சிறப்பாக அமைக்க முடியவில்லை. காதல், சுப்பிரமணியபுரம் போன்ற கதைகளை நிராகரித்தார்.

சாந்தனு சக்கரக்கட்டி, சித்து பிளஸ் டூ, அம்மாவின் கைப்பேசி, கோடிட்ட இடங்களை நிரப்புக, முப்பரிமாணம் என சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். அவர் ஹீரோவாக நடித்த படங்கள் எதுவும் ஓடவில்லை. எனவே, இப்போதுவரை ராசியில்லாத ஒரு நடிகராகத்தான் சாந்தனு பார்க்கப்படுகிறார். தற்போது இராவண கோட்டம் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தனது கேரியரை மாற்றும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான மாஸ்டர் படத்திலும் சாந்தனு கல்லூரி மாணவரக நடித்திருப்பார். இதுபற்றி சமீபத்தில் பேட்டியளித்த சாந்தனு ‘விஜய் சார் படம். அதுவும் எனக்கு நல்ல வேடம் என்றதும் அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஏனெனில், விஜய் சார் படத்தை பல நாடுகளிலும் ரசிகர்கள் பார்ப்பார்கள். படத்தில் எனக்கு குறைந்தது அரை மணி நேர காட்சிகள் இருக்கும் என லோகேஷ் கூறினார்.

30 நாட்கள் அந்த படத்தில் நடித்தேன். எனக்கென ஒரு சண்டை காட்சியே இருந்தது. மேலும், கவுரியுடன் சில காதல் காட்சிகளும் இருந்தது. ஆனால், படத்தை பார்த்தால் சில நிமிடங்கள் மட்டுமே வருவேன். எல்லாவற்றையும் வெட்டி விட்டார்கள். ‘அவ்வளவு பில்டப் விட்ட.. நீ சொன்ன மாதிரி படத்துல ஒன்னுமே இல்லையே’ என் நண்பர்களெல்லாம் என்னை கலாய்த்தார்கள். நான் நடித்த காட்சிகளை வைத்துதான் எல்லோரிடமும் சொன்னேன். இல்லாமல் எப்படி சொல்லுவேன்’ என சாந்தனு புலம்பியுள்ளார்.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top