நான் தோத்துப்போனதுக்கு விஜயகாந்துதான் காரணம்!.. சித்தப்பு சொல்றத கேளுங்க!...
90களில் பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்களிடம் பிரபலமானவர் சரவணன். விஜயகாந்த் போலவே இருக்கிறாரே என ரசிகர்கள் இவரை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.
வைதேகி வந்தாச்சு என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் அதன்பின் பொண்டாட்டி ராஜ்ஜியம், அபிராமி, மாமியார் வீடு, சூரியன் சந்திரன் போன்ற பல ஹிட் படங்களில் நடித்தார்.
ஆனால் ஒரு கட்டத்தில் மார்க்கெட் இழந்தார் சரவணன். மேலும் குடும்ப பிரச்சினை காரணமாகவும் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அதன்பின் சில வருடங்கள் கழித்து அமீர் இயக்கிய பருத்தி வீரன் படத்தில் கார்த்திக்கு சித்தப்புவாக நடித்து கம்பேக் கொடுத்தார். பருத்திவீரன் சரவணனுக்கு பல பட வாய்ப்புகளை பெற்று தந்தது. இப்போது வரை தொடர்ந்து பல படங்களிலும் நடித்து விட்டார் சரவணன். பிக்பாஸ் நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டார் சேலத்தில் சொந்த ஊரான சேலத்தில் ஒரு சினிமா ஸ்டுடியோவையும் உருவாக்கி இருக்கிறார்.
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய சரவணன் ‘நான் சினிமாவுக்கு வந்த புதுசுல விஜயகாந்த் மாதிரியே பண்ற என சில பேர் சொன்னாங்க. நான் தோத்து போனதுக்கு அதுதான் முதல் காரணம். நான் விஜயகாந்தின் சாயலில் இருக்கலாம். ஆனா நான் ஒரு நாளும் அவர மாதிரி நடிச்சதே இல்ல. இன்னும் சொல்லப்போனா எனக்கு விஜயகாந்தை பிடிக்கவே பிடிக்காது.
சினிமாவுக்கு வரதுக்கு முன்னாடி அவரோட ரெண்டு படத்தைதான் நான் பார்த்தேன். நான் ரஜினியின் தீவிர ரசிகன். ‘யார்ரா இவன் ரஜினி மாதிரி வந்து ஏமாத்துறான்னு விஜயகாந்த் பாத்து நினைச்சிருக்கேன்’ என்று ஓபனாக பேசியிருக்கிறார் சித்தப்பு.
