×

காதலித்த பெண்ணை மணக்கும் நடிகர் சர்வானந்த்....

தமிழில் ‘எங்கேயும் எப்போதும்’ படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் சர்வானந்த். அதன் பின் சேரன் இயக்கிய ஜி.கே. நண்பனின் வாழ்க்கை, நாளை நமதே, காதல்னா சும்மா இல்லை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
 

மேலும், தெலுங்கில் தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார். தமிழில் திரிஷா நடித்த 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துள்ளார். தற்போது அவருக்கு 36 வயது ஆகிறது. இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர் சிறு வயது முதலே தனது தோழியை காதலித்து வந்துள்ளார். 

இந்நிலையில், இருவரின் வீட்டினரும் அவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதால் விரைவில் அவர் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News