சுப்ரமணியபுரம் 2 - சசிகுமார் சொன்ன தகவல்
கடந்த 2008ம் ஆண்டு வெளியான படம் சுப்ரமணியபுரம். ஜெய், சசிகுமார், கஞ்சா கருப்பு, சுவாதி, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சசிகுமார் தயாரித்து இயக்கிய முதல் படம் இது. இப்படத்தின் கதை 80களில் நடைபெறும் சம்பவங்களை கொண்ட கதையாக உருவாகியிருந்தது. படத்தின் முதல்பாதி நகைச்சுவையாகவும், இரண்டாம் பாதி கொடுரமான கொலை சம்பவங்களை கொண்டும் கதை அமைந்திருந்தது. மிகப்பெரிய வெற்றியை பெற்ற இப்படம் 18 ஆண்டுகள் நிரைவடைந்தும் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
பொதுவாக ஒரு படம் வெளியாகி வெற்றிபெற்றால் இரண்டாம் பாகம் எடுப்பப்து தற்போது வழக்கமாகி இருக்கிறது. இதில் சில படங்கள் வெற்றியும் பல படங்கள் தோல்வியும் அடைந்தன.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த சசிகுமார், சுப்ப்ரமணியபுரம் 2 பப்டத்தை இயக்கும் எண்ணம் இல்லை. எல்லோரும் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க சொன்னார்கள். ஆனால் அது வெளியாகி 18 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்ப்போதும் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடுகிறார்கள். எனவே அந்த வரவேற்பை கெடுக்க விரும்பவில்லை என்றார்.