Categories: Cinema News latest news

கொரோனாவை விரட்டியடித்து வீடு வந்து சேர்ந்த கட்டப்பா.! மகன் கூறிய மகிழ்ச்சி செய்தி.!

நாளுக்கு நாள் நம் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றன. அந்த கொரோனா முதலமைச்சர்கள், சினிமா பிரபலங்கள் என யாரையும் விட்டுவைக்கவில்லை. பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், கடந்த 8ஆம் தேதி அன்று நடிகர் சத்யராஜ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சையின் பலனாக நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து நம்ம சத்யராஜ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதனை, சத்யராஜின் மகன் சிபி சத்யராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தின் மூலம்  தெரிவித்தார், மேலும் அவர் நலமுடன் இருப்பதாகவும் சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு அவர் பணியைத் தொடங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாகுபலி திரைப்படத்தின் கட்டப்பா கதாபாத்திரத்திற்கு பிறகு பான் இந்தியா நடிகரான அவரது நடிப்பில் அடுத்தடுத்து பல்வேறு திரைப்படங்கள் தயாராகி வருகிறது. விரைவில் அடுத்தடுத்த திரைப்பட ஷூட்டிங்கில் பிசியாகி நடிக்க உள்ளார் சத்யராஜ் என எதிர்பார்க்கப்படுகிறது.

Manikandan
Published by
Manikandan