Categories: Cinema News latest news throwback stories

ஜெயலலிதா முன்னாடியே நடிகரை பங்கமாய் கலாய்த்த சத்யராஜ்!.. முதலமைச்சர்கிட்ட கூட பயம் இல்ல…

விஜயகாந்த் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டி நடிகராக இருந்தவர் சத்யராஜ். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் சத்யராஜ். அவரது திரைப்படங்களுக்கு அப்போது பெரும் வரவேற்பு இருந்து வந்தது.

சத்யராஜ் மிகவும் குசும்பு பிடித்தவர் என தமிழ் சினிமாவில் அவருக்கு ஒரு பேர் உண்டு. எந்த படத்தை பார்த்தாலும் அதில் நகைச்சுவையாக பல சமூக விஷயங்களை பேசிவிடுவார். நடிகர் கவுண்டமணியுடன் காம்போவாக பல படங்களில் நடித்துள்ளார் சத்யராஜ்.

திரைப்படம் முழுக்க இவர்கள் இருவரும் செய்யும் நகைச்சுவையை பார்க்கவே அப்போது ஒரு கூட்டம் திரையரங்கிற்கு சென்றது. ஆனால் நிஜ வாழ்க்கையிலும் கூட சத்யராஜ் அப்படியான நகைச்சுவை திறன் கொண்டவர்தான். பல இடங்களில் அவருடன் பணிப்புரியும் மற்ற நடிகர்களை கிண்டல் செய்துவிடுவார்.

ஜெயலலிதாவிடம் கோரிக்கை:

ஒருமுறை நடிகர் சங்கத்தில் இருந்து அதிகமாக திருட்டு வி.சி.டி விற்பனையாவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவை பார்க்க சென்றனர். அப்போது அந்த குழுவில் சத்யராஜூம் சென்றிருந்தார்.

அனைவரும் முதலமைச்சரிடம் மிகவும் பணிவுடன் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் தங்கள் கோரிக்கையை வைத்து முடித்தவுடன் சத்யராஜ் வேகமாக ஜெயலலிதாவிடம் வந்து எனக்கு இன்னும் ஒரு கோரிக்கை உள்ளது என கூறியுள்ளார்.

என்னவென்று கேட்கும்போது நடிகர் முரளி ரொம்ப வருஷமாக டிகிரி பாஸ் பண்ண முடியாம கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கார். அவரை கொஞ்சம் பாஸ் பண்ணி விடுங்க என முரளியை கலாய்த்துள்ளார் சத்யராஜ். இதை கேட்டு ஜெயலலிதாவும் அடக்க முடியாமல் சிரித்துள்ளார். இப்படி எங்கு சென்றாலும் பங்கமாய் காமெடி செய்யும் ஒரு ஆற்றலை கொண்டவர் சத்யராஜ்.

Rajkumar
Published by
Rajkumar