Categories: Cinema News latest news

சுத்திப்போடுங்க பாஸ்… பல வருஷம் குழந்தை இல்லாமல் இருந்த சென்றாயனுக்கு இரண்டு மகன்கள்!

வில்லன் துணை நடிகன், குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சியமானவர் நடிகர் சென்றாயன். இவர் குறும்படங்களில் நாயகனாக நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார்.

‘பொல்லாதவன்’, `ஆடுகளம்’, `மூடர்கூடம்’ உள்ளிட்ட படங்களில் மாறுபட்ட பாத்திரங்களில் நடித்து, ரசிகர்களின் பார்வையைத் தன் பக்கம் ஈர்த்தார். அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.

sendrayan 1

இதனிடையே பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த சென்றான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் ஒரு குழந்தை தத்தெடுக்க போவதாக கூறினார். இதை கேட்ட கமல், கண்டிப்பாக அடுத்த வருடத்திற்குள் உங்கள் மனைவிக்கு குழந்தை பிறக்கும் என்று கூறியிருந்தார்.

sendrayan 1

இதையும் படியுங்கள்: விஜய் – அஜித் கிட்ட இத கேப்பீங்களா.?! பத்திரிகையாளரிடம் கொந்தளித்த சூர்யா.! இதுதான் அந்த சம்பவம்…

அவர் கூறியது போலவே அவரது மனைவி கருவுற்று சென்றாயனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மகனுக்கு செம்பியன் என்று பெயரை வைத்து சென்றாயனுக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் தன் இரண்டு மகன்களை அழைத்து வந்து இருந்தார் சென்ராயன். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரஜன்
Published by
பிரஜன்