Connect with us

Cinema News

வீட்ட விட்டு விரட்டி விட்டுட்டாங்க!.- காதலி குடும்பத்தால் அசிங்கப்பட்ட செந்தாமரை!..

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் சிறப்பாக வில்லனாக நடிக்க கூடியவர்களாக உள்ளனர். நடிகர் நம்பியார், அசோகன் போன்ற வில்லன் நடிகர்கள் வரிசையில் நடிகர் செந்தாமரையும் முக்கியமானவர்.

இவர்கள் எல்லாம் வில்லனாக நடிப்பதை பார்த்து மக்களும் கூட அந்த காலத்தில் இவர்களை பார்த்து பயப்படுவார்கள். நடிகர் செந்தாமரையும் எம்.ஜி.ஆர் காலக்கட்டத்தில் இருந்தே திரை துறையில் இருந்து வந்தாலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் காலக்கட்டத்தில்தான் பிரபலமானார்.

Sentamarai Rajini

பல ரஜினி திரைப்படங்களில் இவரை வில்லனாக பார்க்க முடியும். நாடகங்கள் மூலமாக சினிமாவிற்கு வந்தவர் செந்தாமரை. நாடகங்களிலும் கூட அவர் வில்லன் கதாபாத்திரத்தில்தான் நடித்தார்.

சிவாஜியின் நாடக நிறுவனத்தில் நடித்து வந்த செந்தாமரை பிறகு எம்.ஜி.ஆரின் நாடக கம்பெனிக்கு வந்தார். அங்குதான் நடிகை கெளசல்யாவும் கூட நடித்து வந்தார். நடிகை கெளசல்யா எப்போதும் புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவர்.

செந்தாமரைக்கு நடந்த அவமானம்

நாடகம் நடக்கும் சமயங்களிலும் புத்தகம் படித்துக்கொண்டிருப்பார். அதே போல செந்தாமரையும் புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவர். செந்தாமரைக்கு பிடித்த ஒரு புத்தகத்தை அன்று படித்துக்கொண்டிருந்தார் கெளசல்யா. அதை பார்த்த செந்தாமரை அதை படித்துவிட்டு தருகிறேன் என இரவல் வாங்கியுள்ளார்.

senthamarai Family photo

படித்த முடித்த பிறகு அந்த புத்தகத்தை தருவதற்காக கெளசல்யாவின் வீட்டிற்கு சென்றுள்ளார் செந்தாமரை. ஆனால் இவர் பார்க்க ரவுடி மாதிரி இருப்பதால் அவரது வீட்டார் அவரை அவமதித்து அனுப்பியுள்ளனர். பிறகு கெளசல்யாவை சந்தித்த செந்தாமரை “உன் வீட்டுல நல்ல மரியாதை கொடுத்தாங்கம்மா!” என கோபமாக கூறியுள்ளார்.

அதன் பிறகு இருவருக்கும் பழக்கமாகி காதலாகி இறுதியில் அது திருமணத்தில் முடிந்துள்ளது. கெளசல்யா செந்தாமரை ஒரு பேட்டியில் இந்த நிகழ்வை பகிர்ந்துள்ளார்.

Continue Reading

More in Cinema News

To Top