Categories: Cinema News latest news

எனக்கு பிடிக்காத நடிகை லைலா.. இரிடேட்டிங் கேரக்டர்! அடுத்த ஆப்பு ரெடி ஷ்யாமுக்கு

Laila: தமிழ் சினிமாவில் 2கே கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை லைலா. அவர் சினிமாவிற்குள் நுழைந்த போது ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார்.

அஜித் சரத்குமார் விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடி சேர்ந்து நடித்த லைலா சிரிப்பின் அழகி என்றே சொல்லலாம். எப்போது பார்த்தாலும் சிரித்த முகத்துடன் உரையாடுபவர். கள்ளம் கபடம் இல்லாத ஒரு நடிகை. அனைவருக்கும் பிடித்தமான ஒரு நடிகை.

இதையும் படிங்க: லோகேஷுக்கு வந்த அதே பிரச்சனைதான் வெங்கட் பிரபுவுக்கும்!.. பாவம் திட்டு வாங்குறாரு!..

சினிமாவில் ஒரு முன்னணி அந்தஸ்தை பெற்ற நடிகையாக மாறிய லைலா திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகி இருந்தார். அதன் பிறகு இப்பொழுது தான் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்த வதந்தி வெப் சீரிஸ் மிகப்பெரிய அளவு அவருக்கு வரவேற்பை பெற்றுத் தந்தது.

சமீபத்தில் கூட விஜய் நடித்த கோட் திரைப்படத்தில் கூட பிரசாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.  அவர் சினிமாவில் ஹீரோயினாக புகழ் பெற்ற போது பிரசாந்த் லைலா இவர்கள் ஜோடியை தான் அனைவரும் விரும்பினார்கள். பார்த்தேன் ரசித்தேன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் கோட் திரைப்படத்தின் மூலம் தான் சேர்ந்திருக்கிறார் லைலா.

இதையும் படிங்க: பாலா செய்றதை கவனிச்சீங்க… தினமும் புகழ் செய்றதை மிஸ் பண்ணிட்டோமே!… தங்கம் பாஸ் நீங்க!..

இந்த நிலையில் நடிகை லைலாவை பற்றி பிரபல நடிகர் ஷ்யாம் ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். லைலாவும் ஷாமும் இணைந்து உள்ளம் கேட்குதே என்ற படத்தில் நடித்திருந்தனர். அப்போது இருவருமே ஒரு வளரும் கலைஞர்களாக இருந்தனர்.

அந்த படத்தில் லைலா ஒரு துரு துருவன கேரக்டரில் நடித்திருப்பார். இதைப்பற்றி ஷியாம் கூறும் போது எனக்கு பிடிக்காத நடிகை லைலா என்றுற சொல்லலாம் அந்த படத்தில் நடிக்கும் போது.

இதையும் படிங்க: அஜித்தை நான் கடவுளா பார்க்குறேன்! மூத்த நடிகையே இப்படி சொல்றாங்களே

ஏனெனில் அந்தப் படத்தில் ஒரு மாதிரி இரிடேட்டிங் பண்ணுகிற கேரக்டரில் லைலா நடித்திருப்பார். அதனால் படம் முழுக்க அப்படியே தான் வருவார். அப்போது பார்க்கும்போது எல்லாம்  ‘ஐயோ’ அப்படின்னு தோன்றும். ஒரு கட்டத்தில் இனிமேல் லைலாவுடன்  நடிக்கவே  கூடாது என தோன்றியது. ஆனால் உண்மையிலேயே மிகவும் ஜாலியான கேரக்டர் லைலா எனக் கூறியிருக்கிறார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini