Categories: Cinema News latest news throwback stories

அந்த படத்துல நடிக்கிறதுக்கு எனக்கு சம்பளமே வேண்டாம்!.. மாதவனுக்கு அதிர்ச்சி கொடுத்த ஷாருக்கான்!..

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே பெரும் வெற்றியை கொடுத்தவர் நடிகர் மாதவன். பாலிவுட் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த மாதவன் 2000 ஆம் ஆண்டு அலைபாயுதே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படம் அவருக்கு நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது.

அதை அடுத்து கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான மின்னலே திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்த படமும் கூட நல்ல வெற்றியை கொடுத்தது. அதன் பிறகு டம் டம் டம், கண்ணத்தில் முத்தமிட்டால், ரன், அன்பே சிவம், ஜே ஜே என வரிசையாக ஹிட் படங்களாக கொடுத்து வந்தார் மாதவன்.

madhavan

அதன் பிறகு மாதவனுக்கு வாய்ப்பு குறைந்தது. பிறகு இறுதி சுற்று படம் வாயிலாக கம்பேக் கொடுத்தார் மாதவன். போன வருடம் மாதவன் இயக்கத்தில் அவரே நடித்து வெளியான திரைப்படம் ராக்கெட்டரி. இந்தியாவில் இருக்கும் முக்கியமான விஞ்ஞானியான நம்பி நாராயணன் என்கிற நபரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது.

ஷாருக்கான் கொடுத்த ஷாக்:

ஹிந்தி, தமிழ் இரண்டிலும் படம் வெளியானது. தமிழில் நம்பி நாராயணனை பேட்டி எடுக்கும் நபராக சூர்யா நடித்திருப்பார். ஹிந்தியில் அந்த கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடித்திருப்பார்.  இதுக்குறித்து மாதவன் ஒரு பேட்டியில் கூறும்போது “படத்தின் கதையை கூறும்போதே அதுக்குறித்து ஷாருக்கான் மிகவும் ஆர்வமாகிவிட்டார். படத்தில் எனக்கும் ஒரு கதாபாத்திரம் கொடுங்கள் மாதவன். நான் கண்டிப்பாக இதில் நடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

ஏதோ விளையாட்டிற்கு கூறுகிறார் என மாதவன் நினைத்துள்ளார். ஆனால் சில நாட்கள் கழித்து மீண்டும் அதுக்குறித்து ஷாருக்கான் கேட்டுள்ளார். சரி என படத்தில் அவருக்கு கதாபாத்திரம் வைத்துள்ளனர். அதை நடித்து முடித்த ஷாருக்கான் அதற்காக எந்த ஒரு சம்பளமும் வாங்கவில்லை. அவர் போட்ட மேக்கப், உடைகள் இவற்றிற்கு கூட அவர் காசு வாங்கவில்லை என கூறியுள்ளார் மாதவன்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை அறிமுகம் செய்யும் ஆசையில் இருந்த இயக்குனர்- காத்திருந்த அதிர்ச்சி

Rajkumar
Published by
Rajkumar