×

வீட்டிலேயே சூதாட்ட கிளப் நடத்திய நடிகர் ஷாம் அதிரடி கைது!

இயற்கை , ABCD , உள்ளம் கேட்குமே, 12பி உள்ளிட்ட திரைப்படங்களில் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் சாம். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இருக்கு புது நடிகர்களின் வரவுகளால் படவாய்ப்புகள் குறைய துவங்கியது. பின்னர் கடந்த சில வருடங்களாகேவ சினிமாவில் இருந்தே ஒத்தியிருந்தார்

 

இந்நிலையில் படவாய்ப்புகள் இல்லாததால் நடிகர் ஷாம் தனது வீட்டில் லட்சக்கணக்கான ரூபாயை போட்டு போக்கர் எனப்படும் சூதாட்ட கிளப் நடத்தி வந்துள்ளார். இரவு 11 மணிக்கு துவங்கி அதிகாலை 4 மணி வரை விளையாடும் இந்த சூதாட்டத்திற்காக காவல்துறை உயரதிகாரி ஒருவருக்கு மாதந்தோறும் 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் சினிமா நடிகர்கள் , நடிகைகள் உள்பட பல தொழிலதிபர்கள் கலந்து கொண்டு போதை பொருட்களை பயன்படுத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்.  அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த நடிகர் சாம் உட்பட  14 பேரை கையும் களவுமாக பிடித்துள்ளனர். பின்னர் அவர்கள் அனைவரும் சொந்த ஜாமீனில் விடுதலையாகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News