விஜயை திட்டிய அப்பா சத்யராஜுக்கு மகன் சிபிராஜ் பதிலடி!.. தளபதி ஸ்டைல்!…
நடிகர் விஜய் அரசியல்வாதியான பின் திரை துறையிலிருக்கும் ரஜினி, கமல் போன்ற சீனியர் நடிகர்கள் உள்ளிட்ட யாரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஏனெனில் பொதுவாகவே திரையுலகம் ஆளுங்கட்சியை எப்போதும் பகைத்துக் கொள்ள மாட்டார்கள். இது காலம் காலமாக நடப்பதுதான். அதோட ஆளுங்கட்சியோடு இணக்கமாகவும் காட்டிக் கொள்வார்கள். அதனால் அவர்களுக்கு பல ஆதாயங்களும் கிடைக்கும்.
அதனால்தான் அரசியலுக்கு வருவது என முடிவெடுத்ததும் சினிமாவிலிருந்து விலகினார் விஜய். ஒருபக்கம் கடந்து சில நாட்களாகவே பிரகாஷ்ராஜ், சத்யராஜ் போன்ற சீனியர் நடிகர்கள் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதில் சத்யராஜின் மகள் திவ்யா ஏற்கனவே திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டவர். ஒருபக்கம் அவர் விஜயை விமர்சித்து வரும் நிலையில் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக சத்யராஜ் பிரச்சாரம் செய்தார். அப்போது அவ்வர் விஜயை விமர்சித்து பேசியிருந்தார்.
விஜய் கட்சி ஆரம்பித்தபோது பெரியாரியும், அம்பேத்காரையும் கொள்கை தலைவர்கள் என சொன்னதும் அவர்களின் கொள்கைகளை விஜய் தம்பி மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கிறார் என சந்தோஷப்பட்டேன். ஆனால் தமிழக முதல்வரை ஸ்டாலின் அங்கிள் என்கிறார், ஸ்டாலின் சார் என்கிறார்..
இப்படி மரியாதை இல்லாமல் அவர் பெரியவர்களை பேசுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரையும் மதிக்கும் விஜய் எப்படி இப்படி மாறினார் என தெரியவில்லை.. திமுகவை தவிர்த்து மற்ற யாருக்கு ஓட்டு போட்டாலும் அது பாஜகவுக்கு போகும் ஓட்டுதான். எனவே விஜயை ஆதரிக்காதீர்கள்’ என சத்யராஜ் பேசியிருந்தார்..
ஒருபக்கம் சத்யராஜின் மகன் சிபிராஜ் விஜயின் தீவிர ரசிகர்.. சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருபவர். இந்நிலையில், சத்யராஜ் பிரச்சாரத்தில் விஜயை விமர்சித்து பேசியிருந்த நிலையில் தான் டிவிட்டர் பக்கத்தில் விஜயின் புகைப்படத்தை பகிர்ந்து விஜய் முன்பு சொன்ன ‘உசுப்பேத்தறவன்கிட்ட உம்முன்னும் கடுப்பேத்தறவன்கிட்ட கம்முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும்’ என்கிற பன்ச் டயலாக்கை பதிவிட்டிருக்கிறார்.
இது அப்பா சத்யராஜுக்கு அவரின் மகன் சிபிராஜ் கொடுத்த பதிலடியாகவே பார்க்கப்படுகிறது.
