Categories: Cinema News latest news

லோகேஷ் கனகராஜின் புதிய படத்தில் யார் ஹீரோ தெரியுமா?!.. இது லிஸ்ட்லயே இல்லையே!..

மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் திரைப்படமே பாராட்டை பெற்றது. அதன்பின் அவர் இயக்கிய கைதி திரைப்படம் அவரை வேற லெவலுக்கு கொண்டு போனது. லோகேஷ் கனகராஜின் வித்தியாசமான கதை, திரைக்கதை ரசிகர்களை ஈர்த்தது. அதன்பின் விஜயை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படமும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

ஆனால், கமல், பஹத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து லோகேஷ் இயக்கிய விக்ரம் திரைப்படம் அவருக்கு என தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிவிட்டது. இவர் இயக்கும் படங்களை லோகேஷ் யூனிவர்ஸ் என ரசிகர்கள் பேச துவங்கியுள்ளனர். தற்போது மீண்டும் விஜயை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பல நாட்கள் காஷ்மீரில் நடந்து முடிந்துள்ளது.

விஜய் ரசிகர்களிடையே லியோ திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படமும் லோகேஷின் ஸ்டைலில் வழக்கமான ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாகத்தான் உருவாகி வருகிறது. ஒருபக்கம் லோகேஷ் கனகராஜின் அடுத்த திரைப்படம் என்ன?, யார்? ஹீரோவாக நடிக்க போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

simbu

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கும் படத்தில் சிம்பு நடிப்பார் என செய்திகள் கசிந்துள்ளது,. இது ஹாலிவுட்டில் வெளியாக kill bill படத்தின் ரீமேக்காக இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 25 வருட நண்பர் முரளியே என்னை ஏமாத்திட்டார்!. குமுறும் தேவயாணி கணவர்!…

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா