விஜய் சி.எம் ஆனதை கொண்டாடிய சிம்பு!.. STR அஜித் ரசிகர் ஆச்சே!.

 
str vijay

எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்கு பின் பல வருடங்கள் கழித்து தமிழ் திரையுலகை சேர்ந்த ஒருவர் தமிழ் நாட்டின் முதலமைச்சராக மாறியிருக்கிறார். இது திரையுலகினருக்கு உற்சாகத்தையும், பெரிய நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. பல நடிகர்களும் இதை தங்களின் வெற்றி போல கொண்டாடுகிறார்கள்.

குறிப்பாக தமிழ்த் திரையுலகில் பல இளம் நடிகர்கள் விஜயின் ரசிகர்களாக இருக்கிறார்கள். சொல்லப் போனால் தேர்தலுக்கு முன்பு சிபிராஜ், சாந்தனு, ஜெய் போன்ற நடிகர்கள் பலரும் விஜய்க்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பேசினார்கள். இதில், நடிகர் ஜெய் ஒருபடி மேலே போய் தவெக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரமும் செய்தார்..

தற்போது விஜய் முதலமைச்சராக மாறியிருக்கிறார். தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கும் வந்துவிட்டது. இந்நிலையில்தான் ஒரு செய்தி வெளியே கசிந்திருக்கிறது. நடிகர் சிம்பு தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார். விஜய் முதலமைச்சரானவுடன் நாங்கள் இதை கொண்டாட வேண்டும் என சொல்லி இரண்டு மூன்று நாட்கள் ஷூட்டிங்கிலிருந்து பிரேக் எடுத்ததாக சொல்லப்படுகிறது.

அடிப்படையில் சிம்பு ஒரு தீவிரமான அஜித் ரசிகர். இதை அவரே பலமுறை சொல்லியிருக்கிறார். அப்படி இருந்தும் தவெகவின் வெற்றியை சிம்பு கொண்டாடியதாக வெளிவந்திருக்கும் செய்தி பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் தேர்தலுக்கு முன் தொடர்ந்து விஜயை ஆதரித்து பேசி வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

From Around the web