×

க்ளீன் சேவ்.. ஸ்டைல் லுக்... வீட்டில் பன்னீர் சமைக்கும் சிம்பு.... வைரல் வீடியோ...

 
simbu

நடிகர் சிம்பு மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது. எனவே, அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். 

டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சிம்பு அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஏற்கனவே, கடந்த வருடம் வீட்டில் சமைக்கும் வீடியோவை வெளியிட்டிருந்தார். அப்போது அவரின் அருகில் நடிகர் விடிவி கணேஷ் இருந்தார்., சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ என கணேஷ் கூற, கடுப்பான சிம்பு ‘பெண்கள் என்றால் சமைப்பது மட்டும்தான் வேலையா?. நான் திருமணம் செய்தால் என் மனைவிக்கு நானே சமைத்து கொடுப்பேன்’ என பொரிந்து தள்ளினார். அந்த வீடியோவை பார்த்த பெண்களை பலரும் சிம்புவை பாராட்டினர்.

simbu

இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு வீடியோவை சிம்பு பகிர்ந்துள்ளார். பன்னீர் மஷ்ரூம் சமைக்கும் அந்த வீடியோவுக்கு ‘சிக்கன் to பன்னீர்’ என அதற்கு தலைப்பிட்டுள்ளார். தன் முகம் தற்போதுதான் நன்றாக இருப்பதாகவும், ரொம்ப நாள் தாடி வைத்திருந்த தாடியை எடுத்துவிட்டதாகவும் சிம்பு அந்த வீடியோவில் கூறியுள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News