ஸ்டைலீஸ் லுக்கில் STR!.. துபாயில் ரிலாக்ஸ் பண்னும் சிம்பு!.. வைரல் போட்டோஸ்!...
சின்ன வயது முதலே சினிமாவில் நடித்து வருபவர் சிம்பு. இவரின் அப்பா டி.ராஜேந்தர் சிம்புவை சின்ன வயதிலேயே சினிமாவுக்கு கொண்டுவந்துவிட்டதால் சினிமா பற்றிய அறிவு சிம்புவுக்கு அதிகம் உண்டு. அதேநேரம் ஷூட்டிங்கிற்கு சரியாக போகாமல் கெட்ட பெயர் எடுத்தார். சம்பள விஷயத்திலும் தயாரிப்பாளர்களிடம் முரண்டு பிடிப்பார்.
சிம்பு சினிமாவில் தொடர்ந்து நடிக்கும் நடிகர் இல்லை. நிறைய இடைவெளி விடுவார். அவரின் பத்து தல படம் வெளியாகி 2 வருடங்கள் கழித்துதான் தக் லைப் படம் வெளியானது. ஆனால், அந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன்பின் சிம்பு நடிப்பில் 3 படங்கள் அறிவிக்கப்பட்டது.

பார்க்கிங் பட இயக்குனருடன் அவரின் 49வது படம். தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்புவின் 50வது, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 51வது படம் என மூன்று படங்களை சிம்பு அறிவித்தார். ஆனால் பார்க்கிங் பட இயக்குனரின் படம் சில காரணங்களால் டேக் ஆப் ஆகவில்லை.

எனவே வெற்றிமாறனின் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படம் அறிவிக்கப்பட்டதால் அது அவரின் 49வது படமாக மாறியது. அந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்குகிறது என பல நாட்களாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எப்போது துவங்கும் என தெரியவில்லை.

சிம்பு கடந்த சில வருடங்களாகவே துபாயில்தான் இருக்கிறார். தேவைப்படும் போது மட்டும்தான் அவர் சென்னை வருகிறார். தற்போதும் அவர் துபாயில்தான் இருக்கிறார்.
இந்நிலையில் துபாயில் உள்ள புர்ஜி கலிபா டவர் பின்னால் தெரிய அவர் ஜாலியாக ரிலாக்ஸ் பண்ணும் புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
