×

தமிழ் சினிமாவில் வேறு எந்த நடிகரும் புரியாத சாதனையை புரிந்த நடிகர் சிம்பு...

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் தான் நடிகர் சிம்பு. இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இருப்பினும் இவருக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபகாலமாக தொடர் சர்ச்சையில் அடுத்தடுத்து சிக்கி வருகிறார்.
 
simbu

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் தான் நடிகர் சிம்பு. இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இருப்பினும் இவருக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபகாலமாக தொடர் சர்ச்சையில் அடுத்தடுத்து சிக்கி வருகிறார்.

சமீபத்தில்தான் தயாரிப்பாளர் சங்கத்திற்கும், சிம்புவிற்கும் இடையில் இருந்த பிரச்சனை சுமூகமாக முடிவடைந்தது. தற்போது தனது புதிய படங்களில் சிம்பு கவனம் செலுத்தி வருகிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தை முடித்துள்ள சிம்பு தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல, கொரோனா குமார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

simbu - cinereporters
simbu - cinereporters

இந்நிலையில் நடிகர் சிம்பு கடந்த 300 நாட்களுக்கு முன்னர் தான் இன்ஸ்டாகிராமில் கணக்கைத் தொடங்கினார். அவர் இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கியது முதல் சிம்புவிற்கு ஏராளமான ஃபாலோயர்ஸ் குவிந்து வந்தனர். ஏற்கனவே தமிழ் சினிமாவில் நடிகர் சிம்புவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கும் ஏராளமான ஃபாலோயர்ஸ் குவிந்துள்ளனர். 

அதுவும் சாதாரணமாக அல்ல. சிம்பு இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கிய 311 நாட்களில் சுமார் மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் அவரது பக்கத்தில் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமா வரலாற்றில் இவ்வளவு குறுகிய நாட்களில் மூன்று மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற நடிகர் வேறு யாரும் இல்லை என்பது தான் இதில் ஹைலைட்டே. 

maanadu-cinereporters
simbu - cinereporters

என்னதான் தன்னைச் சுற்றி அடுக்கடுக்காக பிரச்சனைகளும், சிக்கல்களும் வந்தாலும் நடிகர் சிம்பு இதுபோன்ற சாதனைகளை புரிந்து கொண்டுதான் இருக்கிறார். இதற்கு சிம்புவின் ரசிகர்களும் ஒரு முக்கிய காரணம். இதனால்தான் நடிகர் சிம்பு எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் தனது ரசிகர்களை விட்டுக் கொடுக்காமல் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

simbu instagram
simbu instagram

From around the web

Trending Videos

Tamilnadu News