உடம்பு குறைச்சது போதாதா?... மீண்டும் ஜிம்மில் சிம்பு.. வைரல் புகைப்படம்....
Mon, 8 Feb 2021

உடல் எடை கூடி 100 கிலோவுக்கும் மேல் இருந்த் நடிகர் சிம்பு ஏற்கனவே உடல் எடையை குறைத்து ஸ்லீம் ஆகி எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதோடு ஈஸ்வரன் படத்திலும் நடித்து முடித்தார். இப்படம் தீபாவளியன்று வெளியானது. தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கொஞ்சம் பிரேக் எடுத்த சிம்பு தற்போது மீண்டும் ஜிம்மிற்கு திரும்பியுள்ளார். ஜிம்மில் அவர் நிற்கும் புகைப்படத்தை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதைக்கண்ட ரசிகர்கள் ஏற்கனவே உடலை குறைத்து ஸ்லிம் ஆனபின்பு எதற்கு மீண்டும் ஜிம்? என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், உடலை பிட்னஸாக வைத்துக்கொள்ளவும், மீண்டும் எடை கூடி விடக்கூடாது என்பதற்காகவுமே சிம்பு உடற்பயிற்சி செய்கிறார் என அவரின் நண்பர் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.