அடுத்த படத்துக்கு ரெடியான சிம்பு!.. இயக்குனர் அவர்தான்!.. ஆனா ஒரு சிக்கல்!...
நடிகர் சிம்பு தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பல மாதங்களுக்கு முன்பே துவங்கப்பட்டது, ஆனால், எந்த திட்டமிடலும் இல்லாமல் படமெடுக்கும் வெற்றிமாறனால் படப்பிடிப்பு நீண்டுகொண்டே போகிறது. ஒருபக்கம், கென் கருணாஸை வைத்து ராஜன் வகையறா என்கிற படத்தையும் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். அதனாலும் அரசன் படம் தாமதமாகி வருகிறது.
வேகமாக அரசன் படத்தை முடித்துவிட்டு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சிம்பு திட்டமிட்டிருந்தார். ஆனால், அரசன் படம் இழுத்துக்கொண்டே போனதால் அஸ்வத் ரஜினியை வைத்து தர்மன் படத்தை எடுக்கப்போய்விட்டார். எனவே, ட்யூட் படத்தை இயக்கிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிக்க சிம்பு முடிவெடுத்தார்.
எப்படியும் அடுத்த மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தயாரிக்க ஏஜிஎஸ் நிறுவனத்திடம் சிம்பு பேசி வருகிறாராம். ஒருபக்கம், மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித்குமாரிடமும் பேசி வருகிறார்களாம். எது செட் ஆகிறதோ அந்த நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கும் என சொல்லப்படுகிறது. லலித்தை பொறுத்தவரை சம்பளம் என எதுவும் கொடுக்கமாட்டேன்.. லாபத்தில் பங்கு மட்டுமே கொடுப்பேன் என சொல்பவர். எனவே, இந்த படத்தை தயாரிப்பது யார் என்பது இனிமேல்தான் முடிவாகும்.
