×

தொடர் சாதனைகளை படைக்கும் சிம்பு.... இனிமே சிம்பு ஆட்டம் சிலம்பாட்டம்!...

 
simbu

தமிழ் சினிமாவில் படப்பிடிப்புற்கு ஒழுங்காக செல்லாதவர், படப்பிடிப்பிற்கு தாமதமாக வருபவர் என பெயரெடுத்தவர் சிம்பு. தற்போது அதையெல்லாம் மாற்றி திரைப்படங்களில் அதிக ஆர்வத்துடன் சிம்பு நடித்து வருகிறார். வெறும் ஒரு மாதத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்துக்கொடுத்தார். மாநாடு படத்தில் இடைவெளி இல்லாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்படம் ஏறக்குறைய முடிந்துவிட்டது.

அதேபோல், முன்பு போல் இல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து அவர் தான் நடிக்கும் திரைப்படங்கள் பற்றி தகவல்களை தெரிவித்து வருகிறார். மேலும், புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியன், அதாவது 10 லட்சத்தை தாண்டியுள்ளது. இதையடுத்து, ‘முதல் மில்லியனுக்கு மில்லியன் நன்றிகள்’ என இன்ஸ்டாகிராமில் தன்னை பின் தொடர்பவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘மாங்கல்யம் தந்துனானே’ பாடல் யுடியூப்பில் 100 மில்லியன் (10 கோடி) பார்வையாளர்களை பெற்றுள்ளது. சிம்பு நடிக்கும் படத்தின் பாடல் யுடியூப்பில் சாதனை செய்தது இதுவே முதன்முறையாகும். எனவே, இது அனைத்தும் சிம்புவுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News