Connect with us
Andha Naal23

Cinema News

அப்போதே ஹாலிவுட் ஸ்டைலில் நடித்த சிவாஜி!.. தோல்வி அடைய இதுதான் காரணமா?..

தமிழ் சினிமா உலகில் நடிகர் திலகம், கலைத்தாயின் தவப்புதல்வன் என்றெல்லாம் அழைக்கப்படுபவர் சிவாஜி கணேசன். விதவிதமான கேரக்டர்களைப் பல்வேறு முகபாவனைகளுடன் மேக் அப் இல்லாமலேயே நடித்து அசத்துவதில் வல்லவர் சிவாஜி. அவர் நடிப்பில் வெளியான ஆன்டி ஹீரோ சப்ஜெக்ட் படம் அந்தநாள். படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் போனது. காரணம் என்னென்னு பார்க்கலாமா…

1954ல் வெளியான தேசிய விருது பெற்ற படம் அந்த நாள். எஸ்.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் சிவாஜி தான் ஹீரோ. 1943ல் நடக்கும் கதை. இரண்டாம் உலகப்போர் நடக்கும் நேரம். ஜப்பான் விமானங்கள் சென்னை மீது குண்டுமழை பொழிகிறது. சிவாஜி தனது வீட்டில் இறந்து கிடக்கிறார். போலீஸ் விசாரணை நடக்கிறது.

சிவாஜி இறந்த இடத்தில் கட்டுக்கட்டாகப் பணம்… முதலில் திருடன் தான் கொலை செய்து இருப்பான் என சந்தேகிக்கிறார் துப்பறிவாளர். பணத்தை விட்டுச் சென்று இருப்பதால் மர்மம் நீடிக்கிறது. இதனால் அவருக்கு நெருக்கமான பலரிடமும் விசாரணை தொடர்கிறது. பதில்கள் எல்லாம் அனுமானமாகவே முடிகிறது. அவரவர் பாணியில் கதை சொல்கின்றனர். சிவாஜி வெவ்வேறு தோற்றங்களில் அந்தந்தக் கதைக்கேற்ப நடிக்க வேண்டும். அது படத்தை மேலும் ரசிக்க வைத்து விடுகிறது.ஜவகர் சீத்தாராமன் படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதி நடித்திருந்தார்.

Andha Naal2

Andha Naal2

அந்த வகையில் சிவாஜி கல்லூரி மாணவன், என்ஜினீயர் என தனது கேரக்டர்களை மாற்றிக் கொண்டே இருக்கிறார். கடைசி வரை கொலையாளி யார் என்றே கண்டுபிடிக்க முடியவில்லை. சிவாஜி ஒரு ரகசிய உளவாளியாக இருக்குமோ என படத்தின் கதை நகர்கிறது.

எடிட்டிங், காட்சி அமைப்பு, விறுவிறுப்பான சுவாரசியம் குறையாத சம்பவங்கள் படத்தின் பிளஸ் பாயிண்ட். ஆங்கிலப்படங்களுக்கு இணையாக துப்பறியும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. படத்தைப் பார்த்தால் பெரிய அளவில் யோசித்து எடுத்து இருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. பராசக்தி வெளியாகி 2 வருடங்கள் கழித்து உருவான படம் இது. இந்த மனோகரா  வெளியாகி ஒரே மாதத்தில் இப்படம் வெளியானது.

அந்த நேரத்தில் இப்படி ஒரு படம். அதிலும் முதல் காட்சியிலேயே ஹீரோ இறந்தால் ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? அதனால் தான் படம் பிளாப் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அந்தநாளில் கொண்டாடப்படாத அந்தநாளை இந்தநாளில் கொண்டாடுகிறோம். இதுவும் கமலின் அன்பே சிவம், குணா போன்ற படங்களைப் போல லேட் பிக்அப்பாக இருக்குமோ?

 

Continue Reading

More in Cinema News

To Top