Connect with us
vali

Cinema News

வாலியை பார்த்தாலே சிவாஜி பாடும் அந்த பாடல்!… அந்த அளவுக்கு பிடிக்க காரணம் இதுதானாம்!..

1960களில் முன்னணி இசையமைப்பாளராக இருந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவரின் இசையில் பலரும் பாடல்களை எழுதியிருந்தாலும் அதிக பாடல்களை எழுதியது கவிஞர் கண்ணதாசனும், வாலியும்தான். கண்ணதாசன் சினிமாவில் பெரிய பாடலாசியராக இருந்தபோது கவிஞர் வாலி வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார்.

இரண்டு வருடங்களில் 4 பாட்டுகளை மட்டுமே எழுதியிருந்தார் வாலி. ஒருகட்டத்தில் சினிமாவை விட்டுவிட்டு வேறு வேலைக்கு போய்விடலாம் என முடிவெடுத்தபோது கண்ணதாசன் எழுதிய ‘மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா’ பாடல் அவருக்கு நம்பிக்கையை கொடுக்க மீண்டும் முயற்சி செய்து பாடலசிரியர் ஆனார்.

இதையும் படிங்க: சிவாஜி ஹீரோவாக நடிக்க இருந்த படத்தில் நாகேஷா? போட்ட சவால் எல்லாம் போச்சே.. இது தேவையா?

எம்.எஸ்.வியின் இசையில் எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் பல பாடல்களை எழுதியிருக்கிறார் வாலி. அவை எல்லாமே சூப்பர் ஹிட் பாடல்கள்தான். கண்ணதாசனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே அரசியல்ரீதியாக மோதல் வந்த போது வாலியையே தனது அனைத்து படங்களிலும் எழுத வைத்தார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆருக்கு அவரின் அரசியல் தொடர்பான பல பாடல்களை வாலி எழுதி இருந்தாலும் சிவாஜிக்கு அவர் எழுதிய பாடல்களும் சாகா வரம் பெற்றவைதான். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய வாலி ‘சிவாஜிக்கு நான் பல பாடல்களை எழுதி இருந்தாலும் ‘அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ’ பாடல் அவருக்கு மிகவும் பிடித்த பாடலாகும்.

இதையும் படிங்க: இவர் இந்த பாட்டை பாடக்கூடாது என அடம்பிடித்த சிவாஜி!.. டி.எம்.எஸ் உருவான கதை இதுதான்!..

அந்த பாடலின் சரணத்தில் வரும் ‘இளநீரை சுமந்திருக்கும் தென்னை மரம் அல்ல.. மழை மேகம் குடை பிடிக்கும் குளிர் நிலவும் அல்ல..இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல.. இதற்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல’ என்கிற வரிகளை அவர் சிலாகித்து பேசுவார். என்னை எப்போது பார்த்தாலும் ‘வா வாத்தியாரே’ என சொல்லி இந்த பாடலை பாடித்தான் என்னை வரவேற்பார்\ என வாலி சொல்லி இருந்தார்.

பொதுவாக சிவாஜி படத்தில் இடம் பெற்ற பல தத்துவ பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதி இருக்கிறார். அதேநேரம், பல ஹிட் பாடல்களை கவிஞர் வாலியும் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Cinema News

To Top